“அரசியல் அமைப்பு சட்டம் தான் நமது வழிகாட்டு” - செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர்.. இந்திய ஒற்றுமை குறித்து நெகிழ்ச்சி!

இந்திய தீபாவளியை நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மற்ற போகிறேன், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களை கொண்டு வரப் போகிறோம்
PM Narendra Modi hoists the National Flag
PM Narendra Modi hoists the National FlagPM Narendra Modi hoists the National Flag
Published on
Updated on
2 min read

79 வது சுதந்திர தினமான இன்று “புதிய பாரதம்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விழாவை தொடங்கிய பிரதமர் மோடி, இதனை அடுத்து முப்படைகள் மற்றும் டெல்லி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் டெல்லி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு சென்று 21 குண்டுகள் முழங்க நமது தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

வானில் பரந்த தேசிய கோடிக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த இரண்டு ஹெலிகாப்டரில் ஒன்றில் தேசிய கொடியும் மற்றொன்றில் சிந்தூர் ஆபரேஷனை சித்தரிக்கும் வகையில் கொடிகள் பொருத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார் அதில் “ நமது சாதனைகளை கொண்டாட வேண்டிய நாள் இன்று நாட்டின் 140 கோடி மக்களும் பெருமை அடைய வேண்டிய திருவிழா இது, அரசியல் அமைப்பு சட்டம் தான் இந்தியாவிற்கு ஒளி காட்டும் விளக்கு, கடந்த 78 ஆண்டுகளாக அரசியல் அமைப்பு சட்டம் தான் வழிகாட்டியாக இருக்கிறது.

79th Independence Day celebration in Delhi
79th Independence Day celebration in Delhi79th Independence Day celebration in Delhi

இந்த செங்கோட்டையன் கொத்தளத்திலிருந்து நாட்டை வழிநடத்தும் அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றியவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏதோ ஒரு வகையில் தேசத்திற்க்காக தனது வாழ்க்கையில் சிறந்த ஒன்றை கொடுத்தவர்கள் இன்று என் கண் முன்னே இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு மினிஹேச்சர் இந்தியாவை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சிந்து நதி நீரை முழுமையாக பயன்படுத்தும் உரிமை இந்திய விவாசிகளுக்கு உள்ளது, நீருடன் ரத்தமும் ஒன்றாக கலந்தோடும் ஒப்பந்ததை ஏற்கமுடியாது. எனவே நமது எதிரி நாடு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கக் கூடாது என ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். இந்தியாவை நேசிப்பவர்களுக்கு இந்தியாவின் நண்பர்களுக்கும் இன்று என் இதயத்தில் இருந்து நன்றி செலுத்துகிறேன்.

இந்த தீபாவளியை நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மற்ற போகிறேன், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களை கொண்டு வரப் போகிறோம். இது நாடு முழுவதும் வரி சுமையை குறைக்கும், இந்த மாற்றத்தால் சாமானிய மக்களும் சிறுதொழில் வியாபாரிகளும் பெரிதும் பயனடைவார்கள், இது நமது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் வலுப்படுத்தும்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com