தமிழ்நாடு

"மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் தான் ஆளுநர்" முதலமைச்சர் பேச்சு!!

Malaimurasu Seithigal TV

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார், முதலமைச்சர் முக ஸ்டாலின்.

சென்னையில் நடந்த திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், மணமக்களுக்கு ஆசி வழங்கினார். பின்னர் உரையாற்றிய மு.க.ஸ்டாலின்,  நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருவதாகவும், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக போராடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.கஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக கூட ஆதரித்ததையும் நினைவுபடுத்தி பேசியுள்ளார்.

மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர் அல்ல என்பதை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மசோதாவை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் தான் ஆளுநர் எனவும் விமர்சித்துள்ளார்.