தவெக-விற்கு ஆதரவு அளித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜயை சந்தித்தனர். மேலும், காங்கிரஸ் MLA-கள் 5 பேர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரும் விஜயை சந்தோசித்து ஆதரவு தெரிவித்தனர்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை பல திருப்பங்களும், ஆச்சரியங்களையும் கொண்டிருந்த ஒன்றாக அமைந்திருந்தது. குறிப்பாக பெரும்பான்மை தொகுதியுடன் தவெக ஆட்சியமைத்தது. தனது கோட்டையான கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியுற்றார். பல முக்கிய திமுக புள்ளிகள் தவெக வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவியது போன்ற பல திருப்பங்கள் நிகழ்ந்தது. தவெக பெரும்பான்மை தொகுதிகளுடன் வெற்றிபெற்ற போதிலும் வெற்றி பெற 118 தொகுதிகள் கட்டாயம் இருக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில், 108 தொகுதிகளில் தவெக வெற்றிபெற்றிருந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யவேண்டும் என்று நிலை வந்தது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தவெக ஆட்சியமைக்க கூட்டணி தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் நேற்று மாலை "தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் முடிவெடுக்கலாம்" என கே.சி. வேணுகோபால் தெரிவித்த நிலையில் இன்று அது உறுதி செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி தவெக தலைவர் விஜயை வரவேற்று வாழ்த்து கூறினர். "தமிழ்நாட்டின் நலன், எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கமிட்டி தவெக-வுடன் இணைவது என முடிவு எடுத்துள்ளது" என்று ஜோதிமணி கூறியுள்ளார். "அரசியல் கூட்டணிகளில் சேர்வதும் பிரிவதும் இயல்பானது. 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது திமுக காங்கிரஸ் கட்சி அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் MP ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் - தவெக கூட்டணியை பிரவின் சக்கரவர்த்தி வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது இந்த கூட்டணி நிகழ்ந்துள்ளது. மே 7 அதாவது நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்கவுள்ளதாக ஆளுநருக்கு கடிதம் அளித்திருந்த நிலையில் தற்போது 5 இடங்களை வெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், விசிக கட்சிக்கும் தவெக-விற்கு ஆதரவு அளிக்குமாறு விஜய் கடிதம் எழுதியிருந்த நிலையில் அவர்களும் விஜயுடன் கைகோர்ப்பார்களா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏற்கனவே கூட்டணிக்கு வரும் கட்சிக்கு 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்று அறிவித்திருந்தார். மேலும், "தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது" என்ற நோக்கத்தோடு விஜயுடன் கூட்டணி வைப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முதல் 2029 நாடாளுமன்ற தேர்தல் வரை ந்த கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 1 அமைச்சரவை பதவி தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக-வுடனான கூட்டணிக்கு முன்பே தவெக கூட்டணி பேச்சு நடந்த நிலைல தலைமையின் ஆலோசனைப்படி திமுக-வுடன் கூட்டணி வைப்பதை கூறிய நிலையில் தற்போது அது முடிவிற்கு வந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.