VCK IT Wing controversy 
தமிழ்நாடு

பதிவை 'டெலீட்' செய்த விசிக IT Wing.. எக்கசக்கமாய் குவிந்த விமர்சனங்கள்- 'வைரல்' பதிவை போட்டது யார்?.. கட்சி சொன்ன புது விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். தனிப்பட்ட சில நபர்களின் கவனக்குறைவால் இத்தவறு நிகழ்ந்துள்ளது.

Vinvizhi Leninton

இரு தினங்களுக்கு முன்பு விசிக IT Wing அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்த ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை மேற்கோள் காட்டி வருத்தம் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளனர். விசிக-வின் அதிகாரப்பூர்வ IT Wing சமூகவலைதளப்பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவு பதிவிடப்பட்டது. அந்த பதிவில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அந்த பதிவு அமைந்தது. இந்த பதிவானது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே நெட்டிசன்களால் எதிர்வினையாற்றப்பட்டதோடு டெலீட்டும் செய்யப்பட்டது.

மேலும், இந்த பதிவிட்டு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்ததோடு, தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்திவந்தனர். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே அந்த பதிவானது விசிக-வின் IT Wing பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனாலும், அந்த பதிவானது 'ஸ்க்ரீன் சாட்' மூலமாக சமூகவலைதளத்தில் பரவி வைரலானது.

தற்போது அந்த பதிவிற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களுக்கும் அந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒரு நீண்ட பதிவினை அவர்களது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, vckitwingofficial எனும் Instagram பக்கத்தை நிர்வகித்து வந்த நபரின் அஜாக்கிரதையால், அந்தக் கணக்கு முடக்கப்பட்டு, அதில் எதிர்மறையான மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கண்ட பதிவுகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். தனிப்பட்ட சில நபர்களின் கவனக்குறைவால் இத்தவறு நிகழ்ந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்தக் கட்சியையும் தவறாகச் சித்தரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது.

எங்களது விருப்பத்திற்கு மாறாகவும், எங்களது நோக்கத்திற்கு முரணாகவும் அந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளுக்காக எங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது அந்த Instagram கணக்கை மீட்டெடுப்பதற்கான (Recovery Request) கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளோம். விரைவில் கணக்கை மீட்டெடுப்போம் என நம்புகிறோம்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, கூடுதல் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவோம் என உறுதியளிக்கிறோம். தோழமை சக்திகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், எங்களது பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், இச்சம்பவத்திற்கு எங்களது வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். நன்றி! Vck it wing volunteers Team" என்று இவ்வாறாக பதிவிட்டனர். மேலும், அது ஒரு தனிநபர் தவறு என்று கூறி அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்