தமிழ்நாடு

“நாளை மனம் திறக்கிறேன்” - புதிய கட்சி குறித்து அப்டேட் கொடுப்பாரா அண்ணாமலை? மக்களுடன் ஓர் உரையாடல்!

நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம்

Muthu Lakshmi

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின. கடந்த திங்கட்கிழமை டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, தான் கட்சியில் இருந்து விலக்குவதற்கான காரணத்தை 5 பக்க விளக்க கடிதமாக வழங்கியுள்ளார். ஆனால் கட்சியின் தலைமை அவர் விலகல் கடிதத்தை ஏற்க மறுத்து, பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யும் முடிவில் உள்ளதாக தெரிகிறது. அதையடுத்து இன்று மோடியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அண்ணாமலை ஒரு முக்கிய அறிவிப்பு பதிவை தன்னுடைய சமுக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார். அதில் “நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

டெல்லி பயணத்திற்கு முன் அவரின் காரில் இருந்து கட்சி கொடி அகற்றப்பட்டது மற்றும் கட்சியில் இருந்து விலகுவது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, “இரண்டு நாட்கள் கழித்து உட்கார்ந்து பேசுவோம்” என தெரிவித்திருந்தார். நாளை சென்னை வரும் அண்ணாமலை தன் அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. மேலும் புதிய கட்சி தொடங்குவது குறித்தும் பேசுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 

ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை 2019-ம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்து, பின்னர் ‘நாங்கள் தலைவர்கள்’ எனும் இளைஞர்கள் அமைப்பை  தொடங்கினர். பின்னர் 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் கட்சியின் மாநில தலைவராகவும் பதவி வகித்தார். இந்த பதவி கைமாறியதுடன், 2026 சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியில் போட்டியிடவும் வாய்ப்புகள் வழங்கவில்லை. தொடர்ந்து கட்சியில் இருந்து புறக்கணிப்பை சந்தித்து வந்த அண்ணாமலை, கட்சி விலகி புதிய கட்சியை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

தற்போது அவரின் பதிவு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தான் விலக்க போவதாக அறிவித்து புதிய கட்சி அப்டேட் கொடுப்பாரா? அல்லது கட்சியில் தொடரப்போவதாக தெரிவிப்பார? என்பதை நாளை மதியம் 12 மணிக்கு பார்ப்போம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்