பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்! தேர்தல் புறக்கணிப்பின் எதிரொலி.. புதிய கட்சி தொடங்குகிறாரா?

தான் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை 5 பக்க கடிதமாக வழங்கியுள்ளார்
annamalai
அண்ணாமலை
Published on
Updated on
1 min read

பாஜகவில் இருந்து விலகினார் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தான் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை 5 பக்க  கடிதமாக வழங்கியுள்ளார். மேலும் வரும் செப்டம்பர் மாதம் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் “இரண்டு நாட்கள் கழித்து உட்கார்ந்து பேசுவோம்” என சென்னை விமான நிலையத்தில் தெரிவித்திருந்தார். 

இதற்கு முன்னதாக அண்ணாமலை வாகனத்தில் கட்சிக்கொடி அகற்றப்பட்டு இருந்ததால் கட்சியில் இருந்து விலகுவது குறித்து அரசியல் வட்டாரங்களில் சந்தேகங்கள் எழுந்தது.  தற்போது அதை உறுதி செய்துள்ளார் அண்ணாமலை. இந்த பயணத்தின் போது பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நவீன் மற்றும் முக்கிய தேசிய நிர்வாகிகளை அவர் சந்திததாக தெரிகிறது.

நடத்த 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக அடங்கிய NDA கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அண்ணாமலையின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை. அதற்கு முன் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) படுதோல்வி அடைந்து மூன்றாவது இடத்திற்கு சென்றது. பா.ஜ.க. ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கிடையில், அண்ணாமலை புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வந்தன. எனினும், இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நேற்று டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், அண்ணாமலை அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகின. அண்ணாமலை தொடர்ந்து புரிகணிப்படுவதாகவும், இதனால் அவர் புதிய கட்சி தொடங்குவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் பேசிவந்தன. தற்போது அதை உறுதி செய்து கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும் அண்ணாமலை விரைவில் புதிய கட்சி தொடங்குவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com