"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் குன்னூர் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் அடையாளங்கள்:
இங்கு 18-25 வயதுடையவர்கள் 10% ஆக உள்ளனர். பெண் வாக்காளர்கள் 52.7% என ஆண்களை விட அதிகமாக உள்ளனர். சமூகக் கட்டமைப்பில் படுகர் சமூகம் 35%, ஆதிதிராவிடர்கள் 31%, மற்றும் 1980-களில் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் இருந்து தாயகம் திரும்பியோர் 7% என உள்ளனர்.
உள்ளூர் பிரச்சனைகள்:
சிறு தேயிலை விவசாயிகளுக்குப் பச்சைத் தேயிலைக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த கொள்முதல் விலைதான் இத்தொகுதியின் தலையாய பிரச்சனை. இளைஞர்களுக்கு முறையான விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சி கூடங்கள் இல்லை. மலைச் சரிவுகளில் தடுப்புச் சுவர்கள் இல்லாததால் மழைக்காலங்களில் நிலச்சரிவு அச்சம் நிலவுகிறது. சுற்றுலாத் தல மேம்பாடு மற்றும் விளைபொருட்களைச் சந்தைப்படுத்த முறையான வணிக வளாகங்கள் இல்லாமை மக்களின் குறையாக உள்ளது.
குன்னூர் தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் வரலாறு:
2021-ல் திமுக 45.92% வாக்குகளைப் பெற்றது, 2024-ல் அது 51.9% ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 42.82% பெற்றிருந்தது, 2024-ல் 40% ஆகச் சற்று குறைந்தது. நாம் தமிழர் 5.42%-லிருந்து 6.30% ஆக உயர்ந்துள்ளது.
2026 கணிப்பு:
2026-ல் திமுக 105 பூத்களில் வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. அதிமுக 85 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. 27 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன. கணிப்பின்படி, திமுக 35% வாக்குகளையும், அதிமுக 32% வாக்குகளையும் பெறும். விஜய் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 24% வாக்குகளைப் பிரிக்கும். சுமார் 3% வித்தியாசத்தில் குன்னூர் தொகுதி மீண்டும் திமுக வசம் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கான்சிலிடிக்ஸ் குழு தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.