தமிழ்நாடு

உருவாகிறது ‘AKVAN’ புயல்… வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! தமிழகத்திற்கு பாதிப்பா?

நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக' வலுப்பெற கூடும்

Muthu Lakshmi

நவம்பர் 16ஆம் தேதி மாலையில் மத்திய வங்கக்கடலில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த AKVAN (அரக்கன் என பொருள்படும்) பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மத்திய அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நேற்று நிலவிய வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை 05:30 மணிக்கு ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காலை 08:30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது.

இந்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக' (well-marked low pressure area) வலுப்பெற கூடும். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 15 காலை வாக்கில் அதே பகுதியில் 'காற்றழுத்த தாழ்வு மண்டலமாக' (depression) வலுவடைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 மாலை புயலாக' (cyclonic storm) மேலும் வலுவடைய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் பாதை மற்றும் திசை குறித்த தற்போதைய கணிப்புகளின்படி, இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால், தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் பரவலான கனமழை அதிக வாய்ப்புள்ளது. 

சமீபத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான அர்னாப் மற்றும் முரசு புயல்கள் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடுமையாகத் தாக்கின. இந்த புயலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இல்லையென்றாலும் பரவலாக மழை பொழிந்தது. இந்த இரண்டு புயல்களைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது புயல் உருவை வருகிறது. இந்த புயலுக்கு ஈரான் வழங்கிய ‘அக்வான்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்வான் புயல் எங்கு கரையைக் கடக்கும் என்பது அதன் நகர்வைப் பொறுத்தே அமையும். இதுமட்டுமின்றி, அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில், நவம்பர் 15-ல் இருந்து 17-ஆம் தேதி வரை, மழையின் தாக்கம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.