"தனுஷ் எனக்கு க்ளோஸ்தான்.. ரஜினியின் ரீச் இதுதான்!" - அதிமுக கணக்குக்கு தவெக அமைச்சர் பதில்! 
தமிழ்நாடு

"தனுஷ் எனக்கு க்ளோஸ்தான்.. ரஜினியின் ரீச் இதுதான்!" - அதிமுக கணக்குக்கு தவெக அமைச்சர் பதில்!

"இப்போது இன்னொரு நடிகர் வருவதை வைத்து கணக்கு போடுகிறார்கள். இது டர்னிங் பாயிண்டாக இருக்கும் என நினைக்கிறார்கள். டீசபாயிண்ட்மென்டாக தான் இருக்கும்." என்றார்.

Antony Ajay R

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து சமீப காலமாக பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தனுஷ் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து திராவிட கட்சிகள் தவெகவை வீழ்த்த முடியுமா என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

தனுஷ் எனக்கு க்ளோஸ்

"தனுஷ் வரட்டும் நல்லதுதான். தலைவருக்கு (முதல்வர் விஜய்க்கு) தனுஷ் போட்டியே இல்லை.

இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். ஆனால் போட்டி என்றால் ஐம்பது ஆண்டுகள் ஆண்ட திமுக, அதிமுகவே போட்டியில்லை. தனுஷை எனக்கு நன்றாக தெரியும். நல்லா களோஸ். அவர் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதனால் என்ன நடக்கிறது என்பது போகப் போக தெரியும்." என்றார்.

"டர்னிங் பாயிண்ட் இல்லை டீசபாயிண்ட்மென்ட் தான்"

தனுஷை வைத்து திராவிட கட்சிகள் கணக்கு போடுகின்றனவா என்ற கேள்விக்கு, "திராவிட கட்சிகள் எத்தனையோ கணக்கு போட்டுவிட்டார்கள். பெரிய கூட்டணிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் தேர்தலில் என்ன நடந்தது.

இப்போது இன்னொரு நடிகர் வருவதை வைத்து கணக்கு போடுகிறார்கள். இது டர்னிங் பாயிண்டாக இருக்கும் என நினைக்கிறார்கள். டீசபாயிண்ட்மென்டாக தான் இருக்கும்." என்றார்.

ரஜினிகாந்த் பிரசாரம் செய்தால் மக்கள் மனநிலை மாறுமா என்ற கேள்விக்கு, "1991, 93, 96 என நினைக்கிறேன்... தேர்தலில் எல்லாம் ரஜினிகாந்த் பிரச்சாரத்தைப் பார்த்திருக்கிறோம். யார் வாய்ஸ்-க்கு என்ன ரீச் ஆச்சு எனப் பார்த்தோம். கடந்த தேர்தலில் ட்வீட் போட்டாங்க, என்ன நடந்ததுன்னு பார்த்தோம். காலம் இருக்கிறது என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்." என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.