ajith vote for vijay?  
தமிழ்நாடு

விஜய்க்கு வாக்களித்தாரா அஜித்? ஓட்டு போட்டதும் அவர் காட்டிய செய்கை.. ஒட்டுமொத்த தவெக தொண்டர்களும் கொண்டாட்டம்!

இது விஜய்க்கான ஆதரவுதான் என்று கொண்டாடி தீர்த்து வருகின்றனர்..

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் அதிகாலையிலேயே வந்து தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் அஜித் குமார். அவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தபோது, அங்கிருந்த மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் அவரது விரலில் இருந்த மை அடையாளத்தை படம் பிடித்தனர்.

அஜித் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வரும்போது, அவரது விரலில் இருந்த அடையாளத்தை உயர்த்தி காட்டினார். அதை பார்த்த அங்கிருந்த தவெக தொண்டர்கள், அஜித் தங்கள் தலைவருக்குத்தான் ஆதரவு தெரிவித்து வாக்களித்ததாக கூறி கோஷங்களை எழுப்பினர். விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ள முதல் பொதுத்தேர்தல் இது என்பதால், அஜித் அவருக்கு ஆதரவாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. இன்று அவர் காட்டிய அந்த ரியாக்‌ஷன் தவெக ரசிகர்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் கொடுத்தது போல அமைந்துவிட்டது.

அஜித் யாருக்கு வாக்களித்தார் என்பது ரகசியமாக இருந்தாலும், அவர் எப்போதும் போல தனது ஜனநாயக கடமையை சரியாக செய்துவிட்டார் என்பதே உண்மை. ஆனால், தவெக தொண்டர்களோ அஜித்தின் வருகையையும் அவர் மை வைத்த விரலை காட்டிய விதத்தையும் வைத்து, இது விஜய்க்கான ஆதரவுதான் என்று கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

அஜித்தின் இந்த வைரல் வீடியோ ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் விஜய் எப்போது வாக்களிக்க வருவார் என்ற ஆவலும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அஜித் விடியற்காலையிலேயே வந்து ஓட்டு போட்டது மற்ற சினிமா பிரபலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. எப்போதும் அரசியலில் இருந்து விலகியே இருக்கும் அஜித், இந்த முறை வாக்குப்பதிவு செய்த விதம் மற்றும் அங்கு கூடியிருந்த ரசிகர்களின் ரியாக்‌ஷன், இந்த 2026 தேர்தல் களம் எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. அடுத்த சில மணி நேரங்களில் விஜய் வரும்போது இன்னும் என்னென்ன அதிரடிகள் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்