prabhakara vijakanth 
தமிழ்நாடு

“பிரபா.. ஒரு நிமிஷம் நிக்கணும்” விஜயகாந்தின் மோதிரத்தை மகனுக்கு அணிவித்த பிரேமலதா..! தேமுதிக கூட்டத்தில் முக்கிய பதவிகள் அறிவிப்பு!

தேமுதிக கட்சியின் பத்தொன்பதாவது ஆண்டு செயற்குழு குழு பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று நடைபெற்றது.

Saleth stephi graph

தமிழகத்தில்  2026 - வது சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் மும்முரமாக வேலை செய்து வருகின்றன, பாஜக அதிமுக கூட்டணி உருவாகியுள்ளது, விஜய் தவெக கட்சியின் தேர்வு முகவர் மாநாட்டை வெகு விமரிசையாக நடத்தியிருந்தார்,  அந்த வரிசையில் தேமுதிக -வும் செயல்பட துவங்கியுள்ளது. தேமுதிக கட்சியின் பத்தொன்பதாவது ஆண்டு செயற்குழு குழு பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று நடைபெற்றது. 

 இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல முக்கிய  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கட்சி சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில இளைஞரணி துணை செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவைத் தலைவராக வி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளராக ப. பார்த்தசாரதி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜய பிரபாகர்  மேடை ஏறி தந்தை விஜயகாந்தின் உருவப்படத்திற்கு  மரியாதையை செலுத்திவிட்டு சிறிது நேரத்தில் இறங்க முற்பட்டார் அப்போது “பிரபா, .. பிரபா கொஞ்சம் நிக்கணும்” என தடுத்து நிறுத்தி பேச துவங்கிய  பிரேமலதா..

“இக்கட்சியின் துணை செயலாளர்களாக SSS. சந்திரன், பன்னீர் செல்வம், EX எம்.எல்.ஏ செந்தில் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற அணிகளுக்கான பதவிகள் நாளை மே தினத்தில் தலைமை செயலகத்தில் அறிவிக்கப்படும், கூட்டணி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் சரியான முறையில் அறிவிக்கப்படும். இது கேப்டனுடைய மோதிரம், தனது தந்தையின் மோதிரத்தை அணிய ஆசைப்பட்டார், கேப்டனின் மூத்த மகன் என்ற முறையிலே அக்ஷய திருதியை நாளில் கேப்டனின் வாரிசுக்கு அவரது மோதிரத்தை பரிசளிக்கிறேன்” என பேசி முடித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்