கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, இவர் ரங்கப்பனூர் ஊராட்சியில் எட்டாவது வார்டு, வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் கூலி தொழிலாளி ஒருவர் மளிகை கடைக்கு சென்று விட்டு மறுபடியும் வீடு திரும்பும் போது அந்த பெண்ணை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
அந்த பெண்ணிடம் “நீண்ட நாட்களாக ஓட்டு வீட்டில் வசித்து வரும் உனக்கு கலைஞரின் கனவு இல்லம் இலவசமாக வாங்கித் தருகிறேன்” என ஆசை வார்த்தை கூறி கையைப் பிடித்து இழுத்துள்ளார். அவர் கூறியதை பெண் மறுத்தும் மீண்டும் விடாமல்.ஊராட்சியில் இருந்து அரசு சலுகைகள் பெற்றுத் தருகிறேன், என பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பெண் மறுத்தும், தொடர்ந்து விடாமல் பொது இடத்தில் பேணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்து சென்ற பெண். அவரின் கணவரிடம் கண்ணீர் சிந்திய படியே கதறி அழுது கொண்டு தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்து போன அந்த பெண்ணின் கணவர். வட பொன்பரப்பி காவல் நிலையத்தில், “ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மாசிலாமணி என்ற நபர் தனது மனைவியை, மானபங்கம் படுத்தியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் கொடுத்துள்ளார்.
அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரை, பெற்றுக் கொண்ட காவல்துறையினர். வார்டு உறுப்பினர் மாசிலாமணி மீது வழக்கு பதிவு செய்து. சிறையில் அடைத்தனர். மேலும் ஓட்டு வீட்டில் வசித்து வறுமையில் வாடும் பெண்ணிடம் “கலைஞர் கனவு இல்லம்” வாங்கித் தருவதாக கூறி வறுமையை பயன்படுத்தி, வார்டு உறுப்பினர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்