தமிழ்நாடு

புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு - புதுப்பிக்கப்பட்ட திமுக இளைஞரணி!

Malaimurasu Seithigal TV

திமுக இளைஞரணிக்கு 609 புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி (12-12-2022) திமுக இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளயிடப்பட்டது. இதற்கு மொத்தம் 4,158 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தமிழ்நாட்டின் 9 மண்டலங்களில் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. இளைஞரணி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதை முதலமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார். இந்நிலையில் சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆய்வுப் பணியே கால தாமதத்திற்கான காரணம் எனவும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணி அதிக காலத்தை எடுத்தது நேர்காணலை மட்டும் கருத்தில் கொள்ளாமல், களப்பணியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால்தான் என தேர்வுக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் எந்தெந்த மாவட்டங்களில் அணியை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளது என்பதற்கு தனிக் கவனம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதில் மொத்தம் 609 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளில் மாவட்ட செயலாளர்களின் வாரிசுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் எந்த சிபாரிசையும், அழுத்தத்தையும் ஏற்காமல், நிர்வாகிககளை தேர்வு செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.