ஈரம் காயாத கையால் நெறிப்பட்டு மரணித்தது அரசியல் நெறி மட்டுமல்ல அவசியமான அடிப்படை நாகரீகமும்தான் வாழ்க ஜனநாயகம் என்று ஆ. ராசா காங்கிரசை காட்டமாக விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில் ஆ. ராசா விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில் விஜய் விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தவெக சார்பில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவைப்படுவதால் கூட்டணிக்காக தவெக தரப்பில் இருந்து காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட்டணிக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் இன்று காலை காங்கிரஸ் தவெக-வுடன் கைகோர்த்து. இதனையடுத்து தற்போது 2 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள விஜய் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யவுள்ளார். மேலும், நாளை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசித்து கூறுவதாக கூறியுள்ளது. இன்று மாலை அதிமுக தவெக-விற்கு ஆதரவு அளிக்கவில்லை என்று அதிகாரபூர்வமாக கூறப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சென்று தவெக-வுடன் கைகோர்த்ததற்கு திமுகவின் முக்கிய புள்ளிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆ.ராசா, ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரீக’மும் தான்! வாழ்க ஜனநாயகம்!! என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் காங்கிரஸ் தமிழக மக்களொன் முதுகில் குத்தியுள்ளது என்று கூறினார். "ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அந்த மக்களின் முதுகில் குத்தியுள்ளார்கள். இவர்கள் இதற்காக கூறும் காரணம் சப்பையாக இருக்கிறது. பாஜக கால்பதிக்கக்கூடாது என்பதற்காக தவெக-வுடன் கைகோர்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், விஜய் எப்போது பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்?. கொடுத்ததே கிடையாதே. அவரது ஜனநாயகம் திரைப்படத்தை நிறுத்தியது பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தாரா?. தொகுதி மறுவரையறை பற்றிக்கூட பாஜகவிற்கு வலிக்காத மாதிரி 'வலியுறுத்துகிறோம்' என்றுதான் அவர் கூறினார். தவெக தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கா நன்றி கூறினார்?. அவருக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி கூறினாரா? இல்லையே. அவர் நன்றி கூறியது மோடிக்கு. 2 அமைச்சர் பதவிகளுக்காக இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக ஊத்தி மூட வைத்துவிடுவார்கள் போல". மேலும் பேசிய அவர் 'காங்கிரஸ்காரர்கள் கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து தோல்வி எங்களுக்கு புதிதல்ல. துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல. ஆனால், அவை நிரந்தரமும் அல்ல. காலம் பதில் சொல்லும் என்று திமுக பொருளாளர் டி. ஆர். பாலு கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.