“பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி அமைத்துவிட்டது” என்று தவெக அமைச்சர் நிர்மலகுமார் அரசியல் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் சபாநாயகர் ஓம் பிர்லாவின் தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்றதன் மூலம் பாஜக, திமுக கூட்டணி நிரூபணமானதாகவும் குறிப்பிட்டுள்ளார் எனவே பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி வைக்க போவதாக குறிப்பிட்டார். மேலும் 2001 ஆம் ஆண்டு சூழ்நிலைக்கு திமுக வந்துவிட்டதாக விமர்ச்சித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் திமுக குறித்து விமர்சனங்களை அடுக்கினார். “நல்லவேளை திமுக இப்போ ஆட்சியில் இல்லை.. இருந்திருந்தா மொத்தமா அடமானம் வச்சிட்டு அடுத்த வேலைய பார்க்க போய் இருப்பாங்க.. எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு பிரச்சனை வருகிறதோ அப்போல கூச்சமே இல்லாம டெல்லியில் போய் காலில் விழுவது தான் திமுகவின் வேலை.. அவர்களை காப்பாற்ற செய்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.
பெரிய நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராக இருந்ததாகவும் திமுகவின் ஊழல்கள் முதலீடு செய்ய மறுத்து.. இன்னைக்கு திமுக அரசு போன பிறகு அவர்களுக்கான தேவையான அனைத்து செய்யப்பட்டுள்ளது. எங்கேயும் பார்ட்டி பண்ட் வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் “சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். "முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு ஏன்?” என்ற செய்தியாளர் கேள்விக்கு “இடப்பற்றாக்குறை காரணமாக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து சொத்துவரி உயர்த்துவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது திமுகவின் ராங் பப்ளிசிட்டி என்று குறிப்பிட்டு.. எந்த இடத்திலும் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும் முறைகேடுகள் மட்டுமே சரி செய்யப்பட்டு மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம் என திமுக இதுவரை சொல்லவில்லை” என்றும் கூட்டணி இல்லை என்றால்.. திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆவார் என எப்படி அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகிறார்? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் வழக்குகளில் இருந்து வெளிவருவதற்கு பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயற்சி செய்வதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்