அரக்கோணம் அடுத்த பருத்தி புத்தூர் பகுதியை சேர்ந்த பவானி பலராமன் தம்பதியின் இளைய மகள் ப்ரீத்தி 22 வயதுடைய இவர் ஆட்டுப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு கல்லூரியில் BA இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று அரக்கோணம் பகுதியில் நடந்த, எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ரவியை சந்தித்து ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கும், அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வச் செயல் என்ற தேவா தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து திருமணம் செய்து கொண்டதாகவும். திருமணத்திற்கு பிறகு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்
அதுமட்டுமல்லாமல் சில பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாகவும். தேவா சொல்வதை செய்ய மறுத்தால் அடித்து கொலை செய்து விடுவேன் என்றும் இதை வெளியில் சொன்னால் ப்ரீத்தியின் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.
மேலும் இது குறித்து போலீசில் புகாரளித்தும் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும்,தேவா தன்னிடம் “என்னை எதுவும் செய்ய முடியாது” என சவால் விடுவதாகவும் நீங்கள் தான் நீதி வாங்கி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ப்ரீத்தி “தேவாவினால் எனது வாழ்க்கையும் படிப்பும் பறிபோய் உள்ளது , இதற்கு தேவாவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் என்னைப்போல் எந்த பெண்ணும் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும்.
தேவா இது போல் 7 பெண்களை ஏமாற்றியுள்ளதகவும், ஒரு சிலரிடம் கல்யாணம் ஆகவில்லை என்றும். ஒரு சிலரிடம் தனது மனைவியாக தற்போது உள்ளவர்களுக்கு புத்தி சுவாதீனம் இல்லை என்றும் பொய் சொல்லி திருமணம் செய்து பல பெண்களை ஏமாற்றி உள்ளார்” என்வும் தெரிவித்திருக்கிறார். மேலும் ப்ரீத்திக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்