தமிழ்நாடு

45 கோடி ரூபாய் கடன்...திருப்பி செலுத்தாத திமுக எம்பி...வங்கி அதிகாரிகள் செய்தது என்ன?

Tamil Selvi Selvakumar

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் கடனை திருப்பி செலுத்தாத திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான இடத்தை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்தனர். 

நிலத்தை வைத்து கடன் வாங்கிய திமுக எம்பி:

திமுக எம்.பி ரமேஷூக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் பண்ருட்டி - சென்னை சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து எம்.பி. சுரேஷ், பண்ரூட்டியில் உள்ள தனியார் வங்கியில் 45 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

நீதிமன்றம் உத்தரவு:

ஆனால், அவர் கடனை முறையாக செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்துவந்த நிலையில், தற்போது அந்த இடத்தை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. 

ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள்:

தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வங்கி அதிகாரிகள் திமுக எம்.பி. ரமேஷூக்கு சொந்தமான இடத்தை ஜப்தி செய்தனர்.