"திமுக மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.. நாட்டின் முதல் AI ஊழல்" - ஆதாரங்களை புட்டு புட்டு வைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 
தமிழ்நாடு

"திமுக மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.. நாட்டின் முதல் AI ஊழல்" - ஆதாரங்களை புட்டு புட்டு வைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

"திமுகவின் ஊதுகுழல்கள் மூளையை முதல் குடும்பத்தின் கழிப்பறையில் கழற்றி வைத்துவிட்டு, வெட்கமே இல்லாமல் எங்களைப் பற்றி அவதூறு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்." - ராஜ்மோகன்

Antony Ajay R

பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து இன்று அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

"பிப்ரவரி மாதம் 14ம் தேதி அரசு '7 நாட்களில் இந்த புத்தகங்கள் எல்லாம் கொடுங்க' என்று ஆட்சோபனைக் குரிய உள்ளடக்கம் கொண்ட, ஏதேதோ எழுத்தாளர்கள் பெயரில் குப்பையில் வீசக்கூட தகுதி இல்லாத புத்தகங்களை வாங்க அரசாணை வெளியிட்டுள்ளது (அரசாணையைக் காட்டினார்).

7 நாட்களில் வந்த அந்த புத்தகம் 40 பெட்டிகளில் பெரியார் வளாகத்தை வந்தடைந்துள்ளது. முதலமைச்சர் திறப்பு விழாவுக்கு வருவதனால் அவற்றை பிரித்து அடுக்குவதற்காக பிரித்து சீல் வைத்த நாள்தான் ஜூன் 22.

ஆனால் மனசாட்சி இல்லாமல் அந்த தேதியின் புகைப்படத்தை பகிர்கின்றனர். மூளையை முதல் குடும்பத்தின் கழிப்பறையில் கழற்றி வைத்துவிட்டு, வெட்கமே இல்லாமல் எங்களைப் பற்றி அவதூறு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

(அரசு மற்றும் பதிப்பகம் இடையிலான ஈ-மெயில் உரையாடல்களைக் காட்டினார்)

இது பெரியார் அறிவுலகத்துடன் முடியக் கூடிய ஊழல் இல்லை இது. AI மூலம் எழுதப்பட்ட இந்த குப்பைகளை திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம். ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 கோடி மற்றும் மின் நூல்களை வாங்குவதற்காக ரூ.5 கோடி.

இதற்கான கமிட்டி மீட்டிங் கடந்த டிசம்பரில் நடைபெற்றுள்ளது. இதெப்போல ஜனவரியில் நடந்த கமிட்டி மீட்டிங்கில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் எல்லாம் பரிந்துரை செய்து, இவர்களுக்கு மேலே இருக்கக் கூடிய உயர்நிலைக் குழு திமுக கட்சியின் அழுத்தத்தால் ஒப்புதல் கொடுத்துதான் இந்த புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இதே புத்தகங்களை, இவற்றை புத்தகம் என்று சொல்ல ஒரு வாசகனாக வெட்கப்படுகிறேன். கன்னிமாரா நூலகத்திலும் அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் பலகோடி ரூபாய் Scam நடந்திருக்கிறது.

பேமென்ட் எப்போது சென்றது எனக் கேட்கின்றனர். மார்ச் மாதமே கருவூலத்தில் இருந்து அந்தந்த மாவட்டத்துக்கான பயணம் விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல்முறை ஆணை இதோ (செயல்முறை ஆணையைக் காட்டுகிறார்). தேர்தல் முடிந்த பிறகு புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளோம், நிலுவை தொகைகளை வழங்கியிருக்கிறோம்.

தமிழ்நாடு முழுக்க உள்ள நூலகங்களை AI பயன்படுத்தி டிஜிட்டல் கறையான் அரித்திருக்கிறது.

தாமரை முரளி என்ற எழுத்தாளர் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தாமரை ரவி, தாமரை பன்னீர் என்ற எழுத்தாளர்களும் 100 புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர். மோடிக்கா ரவி, ஐஸ்வர்யா, ஜோதி ஹரிஹரன், லட்சுமி மோகன், கமலாம்பால் கருணாநிதி, பவித்ரா கருணாநிதி. ஸ்டாலின்... இந்த எழுத்தாளர்களை எங்காவது கண்டுபிடித்தார் தயவு செய்து அழைத்து வரவும் கண்டுபிடித்து சொன்னவர்களுக்கு ஒரு பதக்கம் வழங்கப்படும்.

அந்த கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த புத்தகங்கள் வரிசை இதில் இருக்கிறது அதில் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டிய புத்தகங்கள் உள்ளதை நான் காட்டுகிறேன். (பதிப்பகத்தால் பட்டியலில் இருந்து நூல் பரிந்துரைப்புக்கு பயன்படுத்த நூல்களின் பட்டியல் என்ற ஆவணத்தை எடுத்துக்காட்டுகிறார்)

நான் காட்டுவது ஒரிஜினல் இதில் முதல் பக்கத்தில் ஜெயரஞ்சன் கையொப்பமிட்டு இருக்கிறார். யார் கொடுத்த அழுத்தத்தில் இதையெல்லாம் கையெழுத்து விட்டீர்கள்?

இதே மாதிரி புத்தகங்களை திருச்சி காமராஜர் அறிவுலகத்துக்கும் வாங்க வேண்டும் என்று திமுக அரசாணை வெளியிட்டுள்ளது. இப்போது பெரியார் அறிவுலகத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாம் இந்த ஊழலுக்கான சாட்சிகள். இதே குப்பைகளை மதுரை மற்றும் திருச்சி நூலகங்களிலும் அடுக்கி வைத்துள்ளனர்.

அவற்றை எல்லாம் ஒரு குழு அமைத்து கண்டறிந்து, தமிழகத்தில் உள்ள நூலகங்கள் எல்லாம் அலசி அனைத்து நூல்களையும் திரும்பி அனுப்பி அதற்கான தொகையை திரும்பப் பெறுவோம்.

எங்கள் துறை சார்பாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளோம். எங்கள் தலைவர் சொன்னது போல ஒரு ரூபாய் கூட தொடமாட்டோம், தொட்டவர்களை விட மாட்டோம். பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட எத்தனையோ நூலகங்களை நாங்கள் தான் கட்டினோம் என மார்தட்டும் திமுகவின் ஊதுகுழல்கள் இந்த புத்தகங்களை உங்கள் பிள்ளைகளுக்கு படிக்க கொடுப்பீர்களா?

கள்ள நோட்டு அடிப்பதைப் போல AI மூலம் தொழில் முறையாக இதை செய்துகொண்டு உள்ளனர். புத்தகம் வாங்குவதில் இவ்வளவு ஊழல் செய்திருக்கிறார்களே.. கட்டடத்தை காட்டுவதில் என்னென்ன ஊழல் செய்திருப்பார்கள் என்பதை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசாரிக்க வேண்டும் என உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.

இதை படித்துவிட்டு ஒரு மாணவன் யுபிஎஸ்சி தேர்வு எழுதினால் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்தியாவின் முதல் AI ஊழலை செய்ததற்காக வாசகர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நாங்கள் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்