Udhayanidhi Stalin 
தமிழ்நாடு

"Dummy CM.. தமிழ்நாட்டுக்கு துரோகம்.." - மாநில சுயாட்சிக்காக அமைக்கப்பட்ட குழு ரத்து! கொந்தளித்த உதயநிதி.. வரவேற்ற பாஜக

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Vinvizhi Leninton

முந்தைய திமுக ஆட்சி காலத்தில் மாநில உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட குழுவை இன்று தவெக தலைவர் விஜய் கலைத்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில் பாஜக-வின் தலைமை செய்தி தொடர்பாளரான நாராயணன் திருப்பதி வரவேற்றுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் கூட்டாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 2025-ம் ஆண்டில் இந்த குழு அமைக்கப்பட்டது. மேலும், இந்த குழுவில் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைவராகவும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் மாநிலத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோரை இந்த குழு கொண்டிருந்தது. மேலும், இந்த குழு, மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளை மீட்டெடுப்பது மற்றும் மத்திய-மாநில நிதிப் பங்கீடு குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதையே இந்த குழு முக்கிய நோக்கமாக்கக் கொண்டிருந்தது.

தற்போது இந்த குழுவைதான் தவெக அரசு கலைத்துள்ளது. தற்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், "ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?" என்று குறிப்பிட்டு காட்டமாக தனது கண்டனத்தினை பதிவிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு, பாஜக-வின் தலைமை செய்தி தொடர்பாளரான நாராயணன் திருப்பதி வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்