premlatha vijakanth vs eps 
தமிழ்நாடு

‘எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டார்..’ -நிர்வாகிகள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பகீர்!!

முதலமைச்சராக இருந்தவர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பினோம்.ஆனால்....

மாலை முரசு செய்தி குழு

2026 தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் வேலைகளை அனைத்து கட்சிகளும் துவங்கிவிட்டன. திமுக அதிமுக இருகட்சிகளும் தங்களின் கூட்டணி வேலைகளை துரிதப்படுத்தியுள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணியில் இருந்த ஒரே கட்சி தேமுதிக தான். ஏற்கனவே பேசி வைத்தபடி தேமுதிக -விற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை பெறுவோம் என பிரேமலதா உறுதியாக நம்பி இருந்தார். கடந்த தேர்தலில் தேமுதிக -வின் வாக்கு சதவீதம் மிக குறைவு.

ஆகையால் கூட்டணியில் இவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பிரச்சனையும் இல்லை என்ற போக்கிலே இ.பி.எஸ் இருந்தார். இதனால் தேமுதிக நிர்வாகிகள் அதிமுக மீது செம கடுப்பில் இருந்தனர்.

போட்டு உடைத்த பிரேமலதா!

சென்னை தி.நகரில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகளிடம் பேசியதாவது,

“அதி​முக-வுடன் 2024 நாடாளு​மன்ற தேர்​தலில் கூட்​டணி அமைத்​த சமயத்தில்  5 மக்​களவை தொகு​தி​களும், 1 மாநிலங்​கவை​யும் ஒதுக்​கு​வ​தாக தெரி​வித்​தனர். ஆனால் தரவில்லை.

முதலமைச்சராக இருந்தவர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பினோம்.ஆனால் ஏமாற்றிவிட்டார் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை, அதேபோல தான் தேமுதிக வுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.அதனை நம்பி ஏமாந்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் .

அதனால் தான் நாம் ஏமாந்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்திற்கு காசு கொடுத்து தான் அழைத்து வருகிறார் என நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்”

பொறுத்தார் பூமி ஆள்வார்!

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜகாந்த், “ராஜ்யசபா சீட் தருவதாக அவர்கள் தான் சொன்னார்கள். 5 லோக் சபா சீட் ஒரு ராஜ்யசபா சீட்  என்ற  ஒப்பந்தத்திற்கு எடப்பாடிதான் ஒப்புக்கொண்டார், என் வாக்கு தான் முக்கியம்… என எடப்பாடி சொன்னதை நம்பினோம். எடப்பாடி கையெழுத்திட்ட கடிதம் எங்களிடம் உள்ளது. அரசியலில்  கண்ணியம், நாகரிகம் கருதி நாங்கள் அதை உங்களுக்கு காட்டவில்லை.

அரசியலில் பொறுமை தான் மிக முக்கியம். “பொறுத்தார் பூமி ஆள்வார்” அடுத்த ஆண்டு சீட் தரவுதாக சொல்லியிருக்கின்றனர். பாப்போம்… என அவர் பேசியிருந்தார்.

இபிஎஸ் எம்.பி சீட் விவகாரத்தில் கைவிட்ட பிறகும் கூட தேமுதிக அதிமுக -வை காட்டமாக விமர்சிக்கவில்லை. பொறுமை முக்கியம் என பேசியிருந்தார். ஆனால் இப்போது அவர் முன்வைத்திருக்கும் விமர்சனங்கள் அதிமுக -தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதையே உணர்த்துகிறது. ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.