தமிழகத்தில் தேர்தல் தேதி ( ஏப்ரல் 23) அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து குறிப்பாக நடிகர் விஜய் அறிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் நாளை தனது முதல் பிரச்சாரத்தை பெரம்பூரில் தொடங்க அனுமதி கோரியது. இதற்காக தவெக சார்பில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் உள்ள பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் விஜய் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பிரசாரத்திற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் அதற்கு தடையில்லா சான்று வழங்குவார்கள் அந்த சான்று வழங்கிய பின்பு தான் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜய் நடத்தும் பரப்புரைக்கு அனுமதி வழங்குவார். இதுவரை போலீசாரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வரவில்லை எனக் கூறப்படுகிறது அந்த சான்றிதழ் வந்த பின்பு தான் அனுமதி வழங்க முடியும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை போலீசார் தடையில்லா சான்றிதழில் பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி மாறுதல்கள் செய்ய வேண்டும் என குறிப்பிட்டால் அதனையும் தவெக வினர் மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அனால் தேர்தல் ஆணையம் விரையில் பிரசாரத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் “பிரசாரத்திற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யுங்கள் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்” கொடுத்துள்ளது. நெருக்கடியான இடத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டுள்ளதால் மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்க பட்டுள்ள நிலையில் தற்போது கொளத்தூரிலும் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலாகும் பகுதியில் அளவிற்கு அதிகமான மக்கள் கூடுவது கூட்ட நெரிசலை ஏற்படுத்தும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் அனுமதியை மறுத்ததாக செய்தி. 200 முதல் 300 பேர் மட்டும் கூட வேண்டிய இடத்தில் 3000 க்கு மேற்பட்ட மக்கள் கூடினால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என்றும் அசம்பாவிதம் ராதா வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்க கூறப்படுகிறது தெரிகிறது. மேலும் பிரச்சாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில் இந்த தடையால் நாளையும் தவெக கட்சி பிரச்சாரம் நடக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.