தமிழ்நாடு

விஜய் இவ்வளவு நாட்களாக ரெஜிஸ்டர் செய்த ஃபார்முலாவை.. சிம்பிளாக முடித்துவிட்ட EPS

திமுகவுக்கு தவெகக்கும் தான் போட்டி என குறிப்பிடுவது அறியாமையின் வெளிப்பாடு” என

மாலை முரசு செய்தி குழு

நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை அடுத்து தமிழககத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்புமனு மற்றும் பிரச்சாரம் என அடுத்தடுத்த தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசியல் கட்சிகள். கூட்டணி  பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது பிரச்சார களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தல் 4 முனை போட்டியாக இருக்கும் என அரசியல் வட்டாரங்களும், விமர்சகர்களும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் தமிழக வெற்றி கழகத்தின் துவக்கமும், விஜய்யின் அரசியல் வருகையும் தான். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்த கட்சிகள், நாம் தமிழர் இதற்கும் முன் தேர்தலில் பங்கேற்று தங்களுக்கென வாக்கு சதவீதங்களை கணிசமாக வைத்திருக்கின்றது. ஆனால் விஜய் தனது அரசியல் ஈடுபாட்டையும் வாக்கு வங்கியையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதற்கு இந்த சட்ட மன்ற தேர்தல் ஒரு முக்கிய களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தவெக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என  சில செய்திகள் பரவியது. காரணம், விஜய் “திமுக மற்றும் பாஜக யுடன் கூட்டணி இல்லை” என அறிவித்திருந்தார். ஆனால் அதிமுக கூட்டணி பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. அப்போது எடப்பாடி பழனிசாமி “ திமுக பாசிச ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்கு ஒத்த கருத்துடையவர்கள் கூட்டணி அமைத்து ஒன்றாக போட்டியிட வேண்டும்” எனவும் குறிப்பிட்டார். இது விஜய்க்கு ஈபிஎஸ் விடுத்த கூட்டணி அழைப்பாகும். ஆனால் இது கைகூடவில்லை,  தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்தார் விஜய்.

அதன் பின் கரூர் தவெக பிரசாரத்தில் நடந்த 41 இழப்பு தமிழத்தில் பெரும் பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இது கலவையான விமர்சனத்தை விஜயின் அரசியல் வருகை மீது ஏற்படுத்தியது. விஜய் மீது எனக்கு வருத்தம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதை குறித்து ஈபிஎஸ்-யிடம்   கேட்டபோது “கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாக” தெரிவித்தார். அவர் செல்வதற்கு எண்ணம் இருந்ததா, அல்லது அதற்கான வாய்ப்பு இல்லையா, ஏதேனும் தடைகள் இருந்ததா என்பது தெரியவில்லை என்றும் கூறினார். ஆனால், இந்த சம்பவத்தில் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவிக்காதது தமக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது அப்போதைய சூழலுக்கு அவரை வலிமையாக எதிர்க்காமல் அந்த நிலையை கையாண்டு பதிலளித்தார்.

சமீபமாக  தேர்தல் பிரசாரத்தில் விஜய் அதிமுகவையும் எடப்பாடியாரையும் விமர்சித்து வருகிறார். அதில் கள்ளாபெட்டி கூட்டணி மற்றும் பாஜக பீ டீம் என தாக்கி பேசி வருகிறார். மேலும் அதிமுக தேர்தல் போட்டியில் இல்லை என்றும் இங்கு இரண்டு முனை போட்டி தான் திமுக vs தவெக மட்டும் தான் என குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இதை அவர் அதிமுகவை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. ஆனால் அதிமுக கடந்த தேர்தலில்  வலுவான எதிர்க்கட்சியாக தன்னை நிலை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, இன்று வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிச்சாமி  பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “வரும் தேர்தலில் திமுகவுக்கு தவெகக்கும் தான் போட்டி என குறிப்பிடுவது அறியாமையின் வெளிப்பாடு” என தெரிவித்துள்ளார். விஜய் இந்த கருத்து அவரின் அரசியலில் அனுப்பதையே காட்டுவதாக  காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.