ஈபிஎஸ் vs உதயநிதி: “பால்டாயில் குடிச்சதெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது”.. "பதவிக்காக காலில் விழ வேண்டிய அவசியம் எனக்கில்லை" என பதிலடி

அப்போவே போய் இருக்கணும் மேலோகத்துக்கு, இருந்துட்டு நம்ம உயிரை வாங்குதுங்க” என்று தாக்கி
EPS vs Udhayanithi
Published on
Updated on
2 min read

தமிழக அரசியலில் தேர்தல் பரப்புரைகள் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர். தற்போது அது மற்ற கட்சியினரை விமர்சித்து தாக்குவதாக தலைதூக்கியுள்ளது.
கடந்த சில தினங்களாக தொடரும் இந்த வார்த்தை மோதலில், அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, தனது தேர்தல் பிரசாரங்களில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மார்ச் 5 கடலூரில் நடந்த அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஈபிஎஸ், விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கான வாக்குறுதிகளை அளித்தார்.

முன்னதாக உதயநிதி அவரது உரைகளில், “10 தோல்வி பழனிச்சாமி, இப்போது 11வது தோல்வி பழனிச்சாமியாக மாற போகிறார்” எனக் கூறி சின்னத்தை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். மேலும், “பழனிச்சாமியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும்” என்றும், பாஜகவின் அடிமையாக அவர் செயல்பட்டு வருகிறவதாக பல இடங்களில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  இந்த விமர்சனங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தியது.  இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈபிஎஸ், உதயநிதியை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

பின்னர் உதயநிதியின் அரசியல் வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் "அவருடைய வயது தான் எனது அரசியல் அனுபவம்” என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மீண்டும் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, “பால்டாயில் குடிச்சதெல்லாம் பஞ்ச் டயலாக்  பேசுது, அப்போவே போய் இருக்கணும் மேலோகத்துக்கு, இருந்துட்டு நம்ம உயிரை வாங்குதுங்க” என்று தாக்கி பேசியுள்ளார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினை சுற்றி பரவியிருந்த தனிப்பட்ட வதந்தியை குறிப்பிட்டே இந்த விமர்சனம் முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று மீண்டும் உதயநிதி இதற்கு எதிர்வினையாற்றுவதாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் “யார் காலிலும்  விழுந்த அனுபவம் எனக்கு கிடையாது, ஜெயலலிதா முதல் தினகரன் வரை எல்லார் காலிலும் விழுந்தவர் தான் எடப்பாடி, அப்படி பதவிக்காக யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இதுபோல உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். அடிமை என்பது போன்ற தரம் குறைவான வார்த்தைகளை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தி இருக்க கூடாது எனவும் அரசியல் வட்டாரம் தெரிவித்தது. தற்போது மீண்டும் அப்படி குறிப்பிட்டிருப்பது குறித்து அதிமுகவினர் எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் வாக்குறுதிகளை அளிப்பதிலும், அரசியல் ரீதியான கருத்துக்களை முன்வைக்க படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி தனி தாக்குதலுக்கு கொண்டு செல்வது அரசியல் நாகரிகமாக இல்லை எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com