Evils vs Devils remark Evils vs Devils remark
தமிழ்நாடு

"Evils என்று Devils பேசக்கூடாது" - வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்.. தன்னுடைய ஸ்டைலில் பதிலளித்த முதல்வர்!

ஈவில்ஸ் ஈவில்ஸ் (Evils) என்று டெவில்ஸ் (Devils) பேசக்கூடாது" என்று தனது பாணியில் பதிலளித்துள்ளார் முதல்வர்.

Vinvizhi Leninton

நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் நிறைய கருத்துக்களை முன்வைத்ததாகவும் அதில் ஒரு விஷயம் கூறியதாக முதல்வர் ஜோசப் விஜய் சுட்டிக்காட்டினார். அதில் மறைமுகமாக 'Evil' என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர், "இதற்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஈவில்ஸ் ஈவில்ஸ் (Evils) என்று டெவில்ஸ் (Devils) பேசக்கூடாது" என்று தனது பாணியில் பதிலளித்துள்ளார் முதல்வர். இதற்கு சட்டப்பேரவையில் இருந்த உறுப்பினர்கள் பலத்த கரகோசத்தை எழுப்பினர். மேலும், இதனைத்தொடர்ந்து சட்டமன்றமும், முதல்வரின் உரையும் இன்றுடன் நிறைவடைவதால் 'Over' என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் பாணியில் சைகை செய்தார். இதை எதிர்க்கட்சியினர் இருக்கும்போது செய்ய நினைத்ததாகவும் முதல்வர் கூறினார்.

முதல்வர் தனது உரையினை வாசிக்கும்போது ஆதாரமில்லாமல் முதல்வர் பேசுவதாகவும், பேசுவதற்கு எதிர்கட்சினருக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அவையில் பெரும் அமளி ஏற்படத்தினை தொடர்ந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது. மேலும், தவெக அரசினை 'சோபா மாடல்' அரசு என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்ததற்கு கூட முதல்வர் எதிர்வினை ஆற்றியிருந்தார். மேலும், ஊழல் பற்றி, சமூக நீதி பற்றி, பெண்களுக்கு அமைச்சரவையில் இடமளித்து பற்றி, தேசிய கீதம் இரண்டாவதாக பாடியது பற்றி அவையில் பேசினார்.

எதிர்க்கட்சியினரை விமர்சிப்பது போன்று ஒரு குட்டி கதை ஒன்றினையும் கூறினார். அதில் "எங்கே அப்பாவையே காணோம்" என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நக்கல் செய்வது போன்று பேசினார். மின்வெட்டு குறித்தும், திமுகவால் இந்த ஆட்சி நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறியதற்கு, முதல்வர் "மக்களின் தயவால்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது" என்றும் பேசினார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததற்கு ஏன் இவ்வளவு கதறல்? என்றும் பேசினார். மேலும், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்தும் தன் மீது பழிபோடுவதாகவும் முதல்வர் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.