முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நேற்று நாகை மாவட்ட மீனவா் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கோாிக்கைகளை கேட்டறிந்தாா்
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உாிமையாளா்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை 8 லட்சமாக உயா்த்தி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், சிறைபிடிக்கப்படும் சம்பவத்திற்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தியும், ராமேஸ்வரம் மீனவர்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள மீனவா் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடி கோாிக்கைகளை கேட்டறிந்தாா்.
மேலும் ராமநாதபுரம், நாகை மாவட்டங்களை சோ்ந்த மீனவா் சங்க பிரதிநிதிகள் அளித்த கோாிக்கைகளை பரிசீலித்து, இலங்கையில் நெடுங்காலமாக மீட்க இயலாத நிலையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை 6 லட்சம் ரூபாயில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயா்த்தி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
மேலும் இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை 350 ரூபாய் என்பதை 500 ரூபாயாக உயர்த்தி வழங்கியும் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளாா்.