தமிழ்நாடு

கனமழை எதிரொலி: வானில் வட்டமடித்த விமானங்கள்!!

Malaimurasu Seithigal TV

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நள்ளிரவு முதல் திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சார்ஜா, துபாய் ஆகிய நகரங்களில் இருந்து வந்த 2 விமானங்கள் தரை இறங்குவதற்காக தயாரான போது, அந்த நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்தன. பின்னர் 2 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மழை ஓய்ந்தும் திருப்பி விடப்பட்ட 2  விமானங்களும் சென்னை வந்தன. 

அதே போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய  பாங்காக், துபாய், மும்பை, பாரீஸ், தோகா  ஐதராபாத் உள்ளிட்ட 10 விமானங்கள் 15 நிமிடங்களில் இருந்து அரை மணி நேரம் வரை  தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் காற்றுடன்  பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.