தமிழ்நாடு

“திமுகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்” - அதிமுகவில் சர்வாதிகாரம் நடப்பதாக குற்றச்சாட்டு!

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்...

Mahalakshmi Somasundaram

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து திமுகவில் இணைந்து வரும் நிலையில் இன்று (ஜன 21) பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைத்துள்ளார்.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் பன்னீர் செல்வம் செயல்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு போதும் ஓ. பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை கிடையாது என தெரிவித்து வருகிறார். ஏற்கனவே பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவரையும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். அதே போல அதிமுக இரண்டாக உடைந்த ஆரம்ப காலத்தில் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக ஜே.சி.டி பிரபாகரும் தன்னை தவெக வில் இணைத்து கொண்டார். மேலும் சிலர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இவ்வாறு அதிமுகவில் இருந்து சிலர் திமுகவில் இணைந்து வருவது அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுகவின் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்ட வைத்திலிங்கம் தற்போது செய்தியாளர்களை சந்தித்த நிலையில் “அதிமுகவில் இருந்து விலகி அண்ணா உருவாக்கிய தலைமை கட்சியான திமுகவில் என்னை இணைத்து கொண்டேன். திமுக தான் அதிமுகவுக்கு தாய் கழகம் அதிமுகவில் இருப்பவர்கள் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.