“மீண்டும் எடப்பாடியுடன் இணைகிறாரா டிடிவி?” - அமித்ஷாவிடம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை… 10 தொகுதியில் போட்டியிடும் அமமுக!

தமிழ்நாட்டிற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள்...
“மீண்டும் எடப்பாடியுடன் இணைகிறாரா டிடிவி?” - அமித்ஷாவிடம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை… 10 தொகுதியில் போட்டியிடும் அமமுக!
Published on
Updated on
1 min read

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர். இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில் அதிமுகவுடன் பாஜகவை தவிர மற்ற எந்த கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

அதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி பாமக அதிமுக கூட்டணியில் இணைவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்தார். மேலும் நேற்று பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி மேலும் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் வந்து இணையுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ‘டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைவாரா?’ என கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி ‘எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச முடியாது. சில விஷயங்கள் ரகசியமாக இருந்தால் தான் மரியாதை என தெரிவித்தார்’ எனவே டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளார். என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது டெல்லியில் அமித்ஷாவுடனான சந்திப்பில் தினகரன் கூட்டணியில் இணைய சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

அதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு என ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 10 தொகுதிகளை அமமுக கேட்டுள்ளதாகவும் அதற்கு பாஜக தரப்பில் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் டிடிவி தினகரனுக்கு மக்கள் ஆதரவு உள்ள நிலையில் அவர் அதிமுக கூட்டணியில் இணைவது அதிமுகவிற்கு பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com