திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்து கைது செய்யப்பட்ட முதல் அமைச்சர். தூத்துக்குடி ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக கூறி இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதை எதிர்த்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இருந்தார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இன்று அந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து 1 மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓர் முன்னாள் அமைச்சர் மற்றும் MLA இப்படி பொறுப்பு இல்லாமல் அனிதா ராதாகிருஷ்ணன் பேசி இருப்பது ஏற்புடையதல்ல. என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் பதவிக்கு உள்ள மாண்பை குலைக்கும் வகையில் அவருடைய பேச்சு இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் மற்றும் கனிமொழி MP ஆகியோர் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.