கடந்த 2023ம் ஆண்டு முதல் தொகுதிவாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார் ஜோசப் விஜய்.
இந்த ஆண்டு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புக்கள் தடல்புடலாக நடைபெற்று வருகின்றன.
2023ம் ஆண்டும் இந்த விருது வழங்கும் விழா தொடங்கப்பட்டபோதும் அதற்கு பிந்தைய ஆண்டுகளிலும் விழா மேடையில் 10 மணி நேரத்துக்கும் மேலாக நின்று ஒவ்வொருவருக்கும் தன் கைகளால் விருது வழங்கினார் விஜய்.
இப்போது முதலமைச்சராக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் விருந்தும் அளிக்கப்படுவது தனிச் சிறப்பு!
அந்தவகையில் இந்த ஆண்டு 'மாதம்பட்டி பகஷலா' சமையல் குழுவின் விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பட்டியலில், பனங் கருப்பட்டி பருத்திப்பால் அல்வா, ஸ்பெஷல் ரொட்டி மால்புவா, வாணியம்பாடி ஸ்பெஷல் கரிபால டம் பிரியாணி, ரைத்தா, வேக வைத்த சாதம், முருங்கைக்காய் சாம்பார், சின்ன வெங்காய வெண்டக்காய் கார குழம்பு, மிளகு ரசம், கெட்டியான தயிர், தென்னங்குருத்து பொரியல், உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு சபுதான வடை, கருப்பு கவுனி அரிசி பாயசம், உப்பு, மா இஞ்சி ஊறுகாய், ஐஸ்கிரீம் ஆகியவை பரிமாறப்பட உள்ளன.
இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்க நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் விஜய். அவரது வருகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய விழாவில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களுடம் பங்கேற்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.