தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் மிக உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தின் கடமையை ஆற்றுவதில் பொதுமக்களுக்கு இணையாகத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளும் அதிகாலை முதலே ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சினிமா பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்களிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தங்களது 'ஃபேவரிட் ஸ்டார்'களை வாக்குச்சாவடிகளில் நேரில் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும், தேர்தல் விதிகளுக்குக் கட்டுப்பட்டு அமைதியாகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து முதல் ஆளாகத் தனது வாக்கைச் செலுத்தி இந்தத் தேர்தல் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து மற்ற பிரபலங்களும் சென்னையின் முக்கியப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கினர். குறிப்பாக மந்தவெளி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்குத் தம்பதி சமேதராக வந்த இயக்குனர் சுந்தர் .சி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். எப்போதும் சமூகப் பிரச்சினைகளில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, தனது விரலில் உள்ள மை அடையாளத்தைக் காட்டி பொதுமக்களையும் வாக்களிக்கத் தூண்டும் வகையில் புன்னகையுடன் போஸ் கொடுத்தார்.
அதேபோல், சென்னை 'ஸ்டெல்லா மேரிஸ்' கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் தனது வாக்கைச் செலுத்தினார். இளைஞர்கள் அரசியலில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அவர் மிகவும் சிம்பிளாக வந்து ஓட்டுப் போட்டார். திரையுலகைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் முதல் இளம் தலைமுறை நடிகர்கள் வரை அனைவரும் இந்த 2026 தேர்தலில் காட்டும் ஆர்வம், பொதுமக்களிடையே ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் ஓட்டுப் போடும் புகைப்படங்கள் இணையத்தில் பரவுவதைப் பார்த்து, இன்னும் பல இளைஞர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையம் இந்த முறை செலிபிரிட்டிகளின் வருகையினால் வாக்குச்சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்கச் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இருந்தபோதிலும், தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களைப் பார்த்ததும் ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றனர். ஆனால், நட்சத்திரங்கள் அனைவரும் "முதலில் ஓட்டுப் போடுங்கள், பிறகு மற்றவை" என்று ரசிகர்களுக்குப் பக்குவமாக அறிவுறுத்திவிட்டுச் சென்றனர்.
இன்று மதியம் மற்றும் மாலை நேரங்களில் இன்னும் பல டாப் ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள் வாக்களிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி, கமல் போன்ற மூத்த நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யத் தயாராகி வருகின்றனர். காலையிலேயே குஷ்பு, சுந்தர் .சி, கௌதம் கார்த்திக் போன்றவர்கள் வந்து சென்றது, இந்தத் தேர்தல் காய்ச்சலை இன்னும் அதிகமாக்கியுள்ளது. 5.73 கோடி வாக்காளர்களில் ஒருவராகத் தங்களது உரிமையைச் செலுத்திய சினிமா பிரபலங்களின் இந்தப் புகைப்படங்கள் இன்று நாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்