புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் பாஜகவை சேர்ந்த GNS ராஜசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களின் சேவகராகவும், சிறந்த அரசியல் பண்பாளராகவும் திகழும் அவரைப் பற்றிய ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்...
புதுச்சேரி அரசியலில் மக்கள் சேவையையே தனது அடையாளமாகக் கொண்டு, எளிய மக்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் GNS ராஜசேகரன். காரைக்கால் மண்ணில் பிறந்து, அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பயின்று, கடின உழைப்பால் உயர்ந்த இவர், தற்போது திருநள்ளாறு தொகுதியின் விடிவெள்ளியாகத் தேர்தல் களத்தில் நிற்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட போதிலும், சற்றும் மனம் தளராமல் கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி மக்களின் இன்ப, துன்பங்களில் ஒரு நிழலாகப் பின்தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவரது சளைக்காத மக்கள் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, பாஜக இவரை புதுச்சோி நியமன சட்டமன்ற உறுப்பினராக நியமித்தது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே பொது சேவையில் அதிக நாட்டம் கொண்ட ஜிஎன்எஸ் ராஜசேகரன், மக்களுக்கு ஆற்றிய பணிகள் எண்ணற்றவையாகும். என்னாளும் மறக்கமுடியாதவைகளாக இருந்தன. நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரன், கல்விக்கு முதன்மைத்துவம் அளித்து வருகிறார். பல ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் கல்வி விழாக்கள் மூலம் ஊக்கப்படுத்தி வருவதோடு கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.
கடும் மழைக்காலங்களில் தவிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வாழ் மக்களுக்குத் தார்ப்பாய்கள், உணவு மற்றும் ஆடைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று வழங்கி, அவர்களின் கண்ணீரை துடைத்துள்ளார்.விவசாய பெருமக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தார்ப்பாய்கள் வழங்கியதுடன், சாலையோர வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கியுள்ளார்.
தொகுதி முழுவதும் தூய்மையான வாழ்விடங்களை அமைத்துக் கொடுத்ததுடன், தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களையும், மக்களுக்குக் குடிநீர் தொட்டிகளையும் அமைத்துக் கொடுத்துள்ளார். குறிப்பாக கால்நடைகள் தவறி விழும் சூழலில் அவற்றைக் காக்க "COW LIFTING MACHINE" என்ற இயந்திரத்தைத் தனது சொந்தச் செலவில் வாங்கி மக்கள் பயன்பாட்டிற்குக் கொடுத்துள்ளார்.
பல கோயில்களில் குடமுழுக்கு மற்றும் இறைப்பணிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகிறார்.இவரின் சேவைகளை கண்ட பாஜக மேலிடம் புதுச்சோி மாநிலத்தின் நியமன சட்டமன்ற உறுப்பினராக நியமித்தது. அதுமுதல் பிரதமர் மோடி மற்றும் புதுச்சேரி அரசின் நலத்திட்டங்களைச் சாமான்ய மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் அவர் காட்டிய வேகம் அசாத்தியமானது.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆடு, கோழிகள் வழங்கிப் பொருளாதாரத் முன்னேற்றத்தினை உருவாக்கினார். கால்நடைத் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பால் வழங்க வழிவகை செய்தார்.
முதலமைச்சரின் நிவாரண நிதி மற்றும் அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உரியவர்களுக்குத் தேடிச் சென்று பெற்றுத் தந்துள்ளார். அதில் குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் வழங்கப்படும் முதியோர், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைகளைத் தொகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குத் தடையின்றிப் பெற்றுத் தந்துள்ளார்.
பிரதமரின் 'மகன் உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், தொகுதியில் உள்ள 220 ஏழைத் தாய்மார்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கி அவர்களின் சமையலறைப் புகையைத் துடைத்துள்ளார். முதலமைச்சர் மகளிர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பல்வேறு திருமண மற்றும் கல்வி உதவிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்து, பாராட்டுகளையும், மக்களின் அன்பையும் பெற்றுள்ளார். தற்போது திருநள்ளாறு தொகுதி மக்கள் இவரை ஒரு வேட்பாளராக மட்டும் பார்க்காமல், தங்களின் குறைகளைத் தீர்க்கும் ஒரு உற்ற தோழனாகப் பார்க்கின்றனர். தன்னலமற்ற சேவை, தொலைநோக்குப் பார்வை மற்றும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மக்கள் பணியாற்றும் GNS ராஜசேகரன் திருநள்ளாறு தொகுதியின் தவிர்க்க முடியாத மக்கள் தலைவராக உயர்ந்துள்ளார்.
அரசின் திட்டங்களைச் சாமான்ய மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் அவர் காட்டும் தீவிரம், அவரை மக்களின் இதயங்களில் நிலைநிறுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்துடன், மக்கள் சேவையைத் தனது பலமாகக் கொண்டு களம் காணும் GNS ராஜசேகரனின் வெற்றிப் பயணத்தில் தொகுதி மக்கள் பெரும் ஆதரவுடன் இணைந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை.....
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக நந்தகுமார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.