புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன்பிறகு பாஜக சார்பில் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி நியமன எம்எல்ஏக்கள் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் படி தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
அதன்பிறகு ராஜினாமா செய்த ராமலிங்கம் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவரது பதவியேற்பு விழாவின் போது புதிய நியமன எம்எல்ஏக்களாக பாஜக சேர்ந்த GNS ராஜசேகரன், செல்வம், தீப்பாய்ந்தான் ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவர்கள் பதவியேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கான கோப்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டது. இந்நிலையில் இதற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து புதிய நியமன எம்எல்ஏக்களாக GNS ராஜசேகரன், செல்வம், தீப்பாய்ந்தான் ஆகியோர் வரும் 14ம் தேதி மதியம் 12 மணி அளவில் சட்டப்பேரவையில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் GNS ராஜசேகர் அவர்கள் புதிய நியமன எம்எல்ஏ வாக அறிவிக்கப்பட்டது அப்பகுதி மக்கள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தும், ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவி செய்தும் கால்வாய்களை தூர்வாரியும், மழை வெள்ள காலங்களில் மக்களுக்கு உணவளித்தும் இவர் ஆற்றிய பல சேவைகளை திருநள்ளாறு தொகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இவரை மக்கள் “இயன்றதை செய்யும் இளவல்” என பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.