கோபிசெட்டிபாளையம் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி. இது திருப்பூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இத்தொகுதியில் திமுக-வின் என். நல்லசிவம், அதிமுக-வின் வி.பி. பிரபு, மற்றும் தவெக-வின் செங்கோட்டையன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார். இத்தொகுதி மேற்கு தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியில் அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் ஜவுளித் தொழிலைச் சார்ந்த சமூகங்களின் கலவையாக விளங்குகிறது. 2026-ம் ஆண்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரம் அவருக்கு எவ்வாறு அமைகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டிய சூழல் உள்ளது.
மேலும் இந்த கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுகவிற்கே சாதகமான ஒன்றாக பார்க்கப்பட்டது. 2021 , 20216 போன்ற சட்ட மற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றிபெற்றார். 2001-ல் எஸ்.எஸ். ராமநீதரன் அதிமுக சார்பில் வெற்றியைப் பெற்றுத் தந்தார். அதன் பின்பு, 2006-ல் செங்கோட்டையன், திமுக வேட்பாளர் ஜி.வி. மணிமாரனை 4,019 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இத்தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த முறை சட்டமன்ற தேர்தலானது பலராலும் பெரிதுமன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. தற்போது வரை எண்ணப்பட்டுள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக 53 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும், 70 இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது. மேலும், தியாகராய நகரில் போட்டியிடும் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், எழும்பூர் தொகுதியில் போட்டிட்ட ராஜ்மோகன் போன்றோர் தவெக முன்னிலையில் உள்ளனர். இதனை தொடர்ந்து தவெக தலைவரும் நடிகருமான விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 6,463 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதனைத்தொடர்ந்து திருச்சி கிழக்கிலும் விஜய் முன்னிலையில் உள்ளார். மேலும், தற்போது வரை எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளின் நிலவரப்படி தற்போது வரை தவெக பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தற்போது வரை பல்வேறு இடங்களில் தவெக முன்னிலை வகிப்பதாக பார்க்கமுடிகிறது. முதலில் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது தவெக முன்னிலையில் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.