தமிழ்நாடு

என்.எல்.சி -க்கும், தமிழ்நாடு அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது பசுமைத் தீர்ப்பாயம்...!

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்ட கிராமங்களில் நீர், நிலம் மாசடைந்துள்ளது குறித்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பதிலளிக்குமாறு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட  ஆய்வறிக்கையில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசு, என்.எல்.சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் , மாவட்ட நிர்வாகம் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.