selvaperunthakai vs vanniyarasu 
தமிழ்நாடு

“விசிக குறித்து பேச அவருக்கு தார்​மீக உரிமை இல்​லை” - திருமாவை கடுப்பேற்றும் செல்வப்பெருந்தகை..! கொதித்த வன்னியரசு !

பாமகவோடு சேருங்​கள் என சொல்​வது அவர் வேலை​யல்ல. பாஜக​வும், காங்​கிரஸும் சேர வேண்​டும் என நாங்​கள் சொன்​னால் அவர் ஏற்​றுக் கொள்​வா​ரா? ...

Saleth stephi graph

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது.  இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது. 

திருமா உறுதி!

இந்த நிலையில் தான், “திமுக -வோடு பேசி நாங்களும் கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம் சொல்லியிருந்தார். ஆனால் தற்போது, “கூட்டணி நலனையும் வெற்றியையும் கருத்தில்கொண்டு திமுக -விடம் தொகுதிகள் கேட்போம், கூடுதல் தொகுதிகளை கேட்கும் கோரிக்கை நிறைவேறாவிட்டாலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்” என உறுதிபட கூறியிருக்கிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

செல்வப்பெருந்தகை வியூகம் 

தற்போது மதிமுக உள்ளிட்ட சில காட்சிகள் திமுக -விலிருந்து வெளியேறினாலும், பாமக -வை திமுக உடன் இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை ஈடுபட்டுள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தார், அவர் மரியாதையை நிமித்தமாக தான் சந்தித்ததாக கூறினாலும் அது அரசியல் ரீதியான சந்திப்பு தான் என விமர்சகர்கள் பலர் கூறியிருந்தனர்.

ஆனால் ராமதாஸை சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகையின் பேச்சு பாமக -திமுகவில் இணைவதையே பிரதிபலிக்கிறது. சமீபத்தில்  "2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்" என செல்​வப்​பெருந்​தகை பேசியிருந்தார்.

ஆனால் செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சை வன்னியரசு கடுமையாக விமர்சித்திருந்தார். “தமிழகத்​தில் காங்​கிரஸ் வலிமை​யாகவா இருக்​கிறது. எங்​களுக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்க வேண்​டும் என கூறுகிறோம். நான் கூட்​டணி கட்​சியை குறைத்து மதிப்​பிட​வில்​லை.அதே​நேரம், காங்​கிரஸின் வலிமை குறித்து தமிழகத்​தில் கருத்​துகணிப்பு நடத்​தி​னால் உண்மை தெரிய​வரும். தமிழகத்​தில் காங்​கிரஸுக்கு என்ன இருக்​கிறது? அகில இந்​திய அளவில் ராகுல்​காந்தி என்​னும் தலை​வர் சிறப்​பாக செயல்​படு​கிறார். அதன் தொடர்ச்​சி​யாகவே காங்​கிரஸை பார்க்க வேண்​டி​யிருக்​கிறது. விசிக​வுக்கு செல்​வப்​பெருந்​தகை தலை​வர் இல்​லை. இன்று அவர் ஒரு கட்​சி​யில் இருப்​பார், நாளை ஒரு கட்​சிக்கு செல்​வார். இது​தான் அவருடைய கடந்த கால வரலாறு. விசிக குறித்து பேச அவருக்கு தார்​மீக உரிமை இல்​லை. பாஜக, பாமகவோடு சேர மாட்​டோம் என விசிக தலை​வர் தெளி​வாக கூறிய நிலை​யில், பாமகவோடு சேருங்​கள் என சொல்​வது அவர் வேலை​யல்ல. பாஜக​வும், காங்​கிரஸும் சேர வேண்​டும் என நாங்​கள் சொன்​னால் அவர் ஏற்​றுக் கொள்​வா​ரா? “ என காட்டமாக பேசியுள்ளார்.

இதனால் திமுக கூட்டணிக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.