தமிழ்நாடு

“ஸ்டாலினுக்கு சவால் விட்டு சொல்றேன்.. எடப்பாடி தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்!” – சொடக்கு போட்டு பேசிய பியூஷ் கோயல்

“திமுக குடும்பத்திற்கு நாகரிக அரசியல் தெரியாது; ஊழல் ஆட்சிதான் தெரியும்” என்று

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் 2026 சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 23 நடக்கவிருக்கும் நிலையில் அணைந்து கட்சிகளும் வேட்புமனுத்தாக்கல்  முடிந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை மக்களையும் சந்தித்து வரும் அரசியல் கட்சியினர், வாக்கு சேகரிப்பு மட்டுமின்றி மற்ற கட்சியினரையும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த  சென்னை தி.நகர் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். NDA கூட்டணிக்கு ஆதரவாக பேசிய அவர் அடுத்தடுத்து ஸ்டாலின் மாற்று விஜய் குறித்து விமர்ச்சித்துள்ளார்.

குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விடுத்து, “தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் பேசுகையில், ஸ்டாலின் தற்போது பதற்றத்தில் உள்ளார் என்றும், திமுக அரசு ஊழல் மூலம் மக்களை ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டினார். “திமுக குடும்பத்திற்கு நாகரிக அரசியல் தெரியாது; ஊழல் ஆட்சிதான் தெரியும்” என்று அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும், 2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய கூடாது என்று கூறிய அவர், அதிமுக-பாஜக கூட்டணி மக்கள் ஆதரவுடன் நல்ல ஆட்சியை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசின் பல திட்டங்கள் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தேசிய கல்வி கொள்கை குறித்து பேசும்போது, இந்தி கட்டாயம் என்ற குற்றச்சாட்டு தவறானது எனவும், அதற்கான ஆதாரத்தை ஸ்டாலின் காட்ட வேண்டும் எனவும் சவால் விடுத்தார். மேலும், ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறி, அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்றும், கூட்டணி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்றும் கூறினார். திமுக தொடர்ந்து தவறான தகவல்களை பரப்புகிறது என்றும், பிரதமர் பயணம் குறித்தும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார். முடிவில், “ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்று கூறிய பியூஷ் கோயல், இந்த தேர்தல் ஸ்டாலின் குடும்பத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.