தயாநிதிமாறன் தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மணி கண்ட்ரோல் டாட் காம் செய்தி முகாமை செய்தி வெளியிட்டுள்ளது.
கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் குழுமம் “ஏமாற்றுதல், சட்டவிரோதமான பணப் பரிமாற்றம்” ஆகிய முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது முதல் முறை அல்ல, கலாநிதி நிதிமாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பும் இரண்டாவது நோட்டீஸ் என தெரிகிறது.
தயாநிதி மாறனின் அந்த நோட்டீஸில் சன் டிவியின் பங்குகளை 2003 -ஆம் நிலவரப்படி அது இருந்த நிலைக்கே மீட்க வேண்டும்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
சன் டிவியின் பங்குகளை அதன் 2003 ஆம் ஆண்டு அதன் பழைய நிலையை போல் மீட்டெடுக்காவிட்டால், சிவில், குற்றவியல், ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத்தொடங்குவேன் எனக்கூறி, ஜூன் 10 ஆம் தேதி தயாநிதி மாறன் தனது சகோதரர் கலாநிதிக்கு சட்டப்பூர்வ நோட்டீஸை அனுப்பியதாக மணி கண்ட்ரோல் செய்தி முகமை வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. கலாநிதி மாறனைத் தவிர, ஏழு பிரதிவாதிகளின் பெயர்கள் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் கலாநிதி மனைவி காவேரி கலாநிதி, காவியா கலாநிதி ஆகியோரின் பேரும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் முழு நிறுவனத்தின் சொத்துக்களையும் தங்களின் சுயலாபத்திற்காக கையக்கப்படுத்த சதி செய்ததாக அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 2023 இல் ஏற்கனவே ஒரு முறை வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டு பங்குதாரர் முறையின் அடிப்படையில், தற்போது சன் டிவியின் விளம்பரதாரராக செயல்படும் கலாநிதி மாறன், நிறுவனத்தில் 75% பங்குகளை வைத்திருக்கிறார், இதன் மதிப்பு, தற்போதைய சந்தை விலையில், ரூ.18,000 கோடி ஆகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.