
இன்னும் 10 மாதங்களில் தமிழ்நாடு வரலாறு காணாது முக்கிய மான சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. கூட்டணி அமைத்தல் கொடி பிடித்தல், கொள்கையை நிறுவுதல் என அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் நடிகர் விஜய் -யும் தமிழக வெற்றி கழகத்தை துவங்கி உள்ளார். இதனால் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
திமுக கூட்டணி..!
திமுக -வில் விசிக, கம்யூனிஸ்ட் பார்ட்டி, மதிமுக, தமிழர் வாழ்வுரிமை கட்சி, என சித்தாந்த ரீதியில் அக்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
ஆனால் அவ்வப்போது பாஜக -வினர் திமுக உடைகிறது. மதிமுக பாஜக -வில் இணைய போகிறது..விசிக இணையப்போகிறது.. என தொடர்ந்து பகீர் கிளப்பி வருகிறது.
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணி இன்னும் மேலெழும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் அதிமுக - பாஜக கூட்டணியில் நிறைய முரண்கள் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. சமீபத்தில் அமித்ஷா மதுரைக்கு வந்தபோது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என பேசியிருந்ததில், பழனிசாமி கடுப்பாகியுள்ளதாக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றன. ஏற்கனவே களத்தில் பாஜக -அதிமுக கூட்டணி சோபிக்கவில்லை, தற்போது தர்க ரீதியிலாகவும் சிக்கல்கள் எழுந்துள்ளது.
தற்போது அதிமுக -பாஜக கூட்டணி முறியப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஒருவேளை பாஜக கூட்டணி பிரிந்தால் 5 முனை போட்டியாக மாற வாய்ப்புண்டு. இது நிச்சயம் திமுக -விற்கு தான் சாதமாக அமையும். ஏனெனில் அதிமுக -விலிருந்து பிரியும் ஓட்டுகள் திமுக -விடம் சென்று சேரும்.
தனிக்கட்சி துவங்குகிறார் அண்ணாமலை!
இதற்கிடையில் பாஜக -வின் முன்னாள் தலைவர் தனிக்கட்சி துவங்குகிறார் என தகவல்கள் கசிய துவங்கின. மேலும் அவர் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை என்பதால் அவர் நிச்சயம் மக்களால் மறக்கப்படுவார் என்ற கருத்தும் உலவுவதால் தனித்து நிற்க கூடும் என பேசப்பட்டது. தனிக்கட்சி துவங்கும் அளவுக்கு அண்ணாமலையிடம் பலம் இருந்தாலும், அது அவருக்கு மிகப்பெரும் பின்னடைவாகவும் இருக்கக்கூடும் என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.
ஆனால் அண்ணாமலைக்கு துன்று ஒரு குறிப்பிட்ட Fan Followers இருக்கின்றனர். ஆனால் அவர்களால் தான் அவருக்கு சிக்கலும் என்கின்றனர். பஜக தலைமை மிகப்பெரும் அளவுக்கு பக்க பலமாக அண்ணாமலைக்கு இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் சமீபத்திய அமித் ஷா வின் வருகை, மணிலா தலைவர் பதவி பறிப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளை சொல்லலாம்..
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன, அதற்கு முன்னதாக நிச்சயம் அரசியல் கட்சிய்களின் செயல்பாடுகள் வெளிப்பட்டே ஆகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.