vijay-bussy-anand 
தமிழ்நாடு

தவெகவிற்குள் கட்சி மோதலா!?? ‘புஸ்ஸி ஆனந்துக்கு காத்திருக்கும் ஆப்பு!! - தலைமையின் முடிவு என்ன!?

விஜய் மீண்டும் எப்போது பிரச்சாரத்திற்கு திரும்புவார்? கட்சியின் நிலைப்பாடு இதற்கு மேல் ...

மாலை முரசு செய்தி குழு

வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும்  மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.

விஜய் கட்சி துவங்கிய நாளிலிருந்தே அவருக்கான ஆதரவும், ரசிகர் கூட்டமும் பெருகி வழியத்துவங்கியது. விஜய் சில முக்கியமான இடங்களில் அரசியல்வாதியாக கோட்டை விட்டாரா? என்றால், ஆம் உண்மைதான். அதற்கு காரணம் அவர்கள் புதியவர்கள் அரசியலுக்கு பழக்கமில்லாதவர்கள், மேலும் அரசியல்மயப்படாத தொண்டர்களை வைத்திருப்பவர்கள். தவறி ஒரு முறை செய்தால் தான் அது தவறு.. மீண்டும் மீண்டும் செய்தால்..” அதை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ -துவங்கியுள்ளது.

இந்த சூழலில் விஜய் மீண்டும் எப்போது பிரச்சாரத்திற்கு திரும்புவார்? கட்சியின் நிலைப்பாடு இதற்கு மேல் என்னவாக இருக்கும் என பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் கட்சிக்குள் புதுவிதமான சலலசப்பு எழுந்துள்ளதாக, கட்சி நிர்வாகிகள் கூடுகின்றனர். “கரூர் சம்பவத்தில் தவெக நடந்து கொண்ட விதம் சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழாமல் இல்லை. ஆனால் முதற்கட்ட தலைவர்கள் யாரும் பாதிக்கப்பட்ட மக்களோடும் இல்லை, கட்சி தொண்டர்களை வழிநடத்தவும் இல்லை. மேலும், பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானது மேலும் கட்சிக்கு பின்னடைவை தந்துள்ளது. மேலும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத ஒரு நபராக ஆனந்த் உள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் கூட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆனந்த் கட்சியைவிட்டு நீக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது” என்கின்றனர் சில ஆர்வலர்கள் 

ஆனால் ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்பதை போல, இந்த சலசலப்பு பேச்சுகு காரணமே கட்சியின் மற்றொரு பணம் படைத்த முக்கிய புள்ளி என்கின்றனர் சில விஷயம் தெரிந்தவர்கள். அப்படி அந்த முக்கிய புள்ளிக்கும், பொதுச்செயலாருக்கும் ஆரம்பகட்டத்தில் பிரச்னை  இருந்து தற்போது சுமுகமாக பழகி வந்தாலும், பல காத்திருந்து ஆனந்தின் கதையை முடித்து வைக்க வேலை செய்கிறார். மேலும் இந்த ‘விரிச்சுவல் வாரியர்ஸ்’ கூட்டத்தையும் இவர்தான் கையில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.