தேர்தலுக்காக தலைதூக்கும் வாரிசுகள்..! நயினாரும் இப்போ இந்த வரிசையில சேர்ந்துட்டாரே!? -கடுப்பில் தொண்டர்கள்!!

பாலாஜியின் திடீர் அரசியல் பிரவேசத்தால் நெல்லை பாஜக உறுப்பினர்கள்....
nainar vs balaji nainar
nainar vs balaji nainar
Published on
Updated on
1 min read

2026  சட்டமன்ற தேர்தல் முடிவதற்குள் அல்லோல்படப்போகிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. புதிய பழைய, சிறிய பெரிய கட்சிகள் அனைத்தும் இந்த தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. மேலும் பல தலைவர்கள் இந்த தேர்தலில்தான் தங்கள் வாரிசுகளை களம் இருக்க கடத்திருக்கின்றனர். 

இது பிரதான கட்சிகளுக்கு மட்டுமின்றி அந்த கட்சியில் உள்ள இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களை வரை பொருந்தும். 

அந்த வரிசையில் சபாநாயகர் மு. அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், மற்றும் திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ -வுமான அப்துல் வகாபின் மகன் முசாம்பில்,  இவர்களோடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜியோடு  தற்போது இந்த வரிசையில் வந்துள்ளார். அலெக்ஸ் அப்பாவு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி பொறுப்பில் ஏற்கனவே இருந்த நிலையில்,  சமீபத்தில் வள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

தனது ராதாபுரம் தொகுதிக்காக அப்பாவு மகனை தயார்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. 

ஆவுடையப்பனும் தனது அம்பாசமுத்திரம் தொகுதியை மகன் பிரபாகரனுக்கு தரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த சூழலில்தான் முசாம்பிலை துணை முதல்வர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார் அப்துல்கவாப் 

நயினார் ரூட்   

தனது மகனை முன்னிலைப்படுத்த விரும்பும் பாஜக தலைவர் நயினார் பாஜக விளையாட்டு மற்றும்  திறன் மேம்பாட்டு பொறுப்பையும் அண்மையில் மகனுக்கு வாங்கிக்கொடுத்துள்ளார். 

பாலாஜியின் திடீர் அரசியல் பிரவேசத்தால் நெல்லை பாஜக உறுப்பினர்கள் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com