தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை துவங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன் தினம் முதல் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் கணக்கெடுக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் வெளியாகி அங்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனிடைய தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக இந்த பணியானது துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் கூட்டத்திலும் அதே கட்சியினர் பங்கேற்றும் வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பல்வேறு குளறுபடியான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
*13வது கேள்வியாக 01.07.25 -யை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்ட பீகாரின் சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதியை இணைக்க வேண்டும் என வாக்காளர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் ஆதாரமாக நகலை இணைக்க சொல்லி இருப்பதால் தமிழக வாக்காளர் குழப்பம் அடைந்துள்ளனர்.
அதாவது பீகாரில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை அப்படியே தமிழகத்திற்கு COPY, PASTE செய்துள்ளதாக தமிழக வாக்காளர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
இந்த விண்ணப்ப படிவுகளை முறையாக ஆய்வு செய்து மீண்டும் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்திருக்கிறது.
04.11.25 தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்ட தமிழ்நாட்டின் சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பீகாரின் சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து படிவங்களிலும் இதே போன்று இருப்பதாகவே தெரிய வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.