“அண்ணா செத்துட போறான்..” பெண்ணின் பாய் பெஸ்டியை தாக்கிய இருவர்..! வெளியான அதிர்ச்சி வீடியோ… போலீசில் சிக்கியது எப்படி?

சூர்யாவின் பெண் தோழியிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அறிந்துகொண்ட சூரியா...
men attacked
men attacked
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் பகுதி மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு ஒரு பெண் தோழி இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரபு(28) என்ற நபர் சூர்யாவின் பெண் தோழியிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அறிந்துகொண்ட சூரியா கடும் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் பிரபுவை தாக்க தனது மற்றொரு நண்பரான சாமிநாதன் என்கிற சிவா உடன் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி பல்லடம் பேருந்து நிலையத்தில் மூவரும் எதிர்பாராதவிதாமாக சந்தித்து கொண்ட நிலையில் மது அருந்த மூவரும் பல்லடம் தாராபுரம் சாலை ஆலுத்துபாளையம் பகுதியில் உள்ள மது கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

அப்போது சூரியாவிற்கும் பிரபுவிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட சூர்யா மற்றும் சிவா ஆகியோர் பிரபுவை காலால் உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர் . மேலும் மது பாட்டிலை உடைத்து பிரபுவின் கழுத்தில் வைத்து மிரட்டி வீடியோவாக தங்களது போனில் எடுத்து வைத்துக் கொண்டனர். அந்த வீடியோவில், பிரபுவை சாமிநாதன் சரமாரியாக தாக்கும்போது, சூர்யா “அண்ணா செத்துட போறான்..” என கூறவே, “சாவட்டும் டா நா கேசு வாங்கிக்கிறேன்”  என அச்சுறுத்தும் தொனியில் பேசியிருப்பார். தொடர்ந்து இந்த வீடியோ போலீசாருக்கு கிடைக்கவே பல்லடம் போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் துரிதமாக செயல்பட்டு காவல்நிலையம் அழைத்து வந்து அவர்களை  விசாரிக்கும் விதத்தில் விசாரிக்கவே உண்மைகள் வெளிவந்திருக்கிறது.

தொடர்ந்து பிரபுவை தாக்கிய குற்றத்திற்காக சூரியா மற்றும் சிவா ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண் தோழியிடம் பேசிய பாய் பெஸ்டியை மிரட்டி தாக்கிய சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com