DMK IT Wing slams Vijay 
தமிழ்நாடு

“No Compromise சொன்னது இதற்காகவா?.. சிங்கப்பெண் படை ரீல்ஸ் எடுக்கத்தானா?" - முதல்வரின் பஞ்ச் டயலாக்கை சுட்டிக்காட்டி.. விளாசிய திமுக IT விங்!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என Punch Dialogue பேசியது எல்லாம் இதற்காகவா?.

Vinvizhi Leninton

தமிழகத்தில் அடுத்தடுத்து சிறுமிகள் காணாமல் போனது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்த அவலநிலை குறித்து திமுக IT Wing தனது அதிகாரப்பூர்வ X தளபக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விழுப்புரம், செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியை தேடும் பணி 9வது நாளாக தொடர்ந்து வருகிறது. மேலும், ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதி, பாறை இடுக்குகளில் டிரோன் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அடுத்தது, பல்லகவுண்டம்பாளையத்தில் காணாமல்போன செவிலியர் சடலமாக மீட்கப்பட்டார். அடுத்து, காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மயமாகியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அடுத்துதடுத்து நடந்துள்ளதால் தமிழ்நாட்டின் சட்டஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளதாக பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த 3 விஷயங்களையும் குறிப்பிட்டு தங்களது அதிகாரப்பூர்வ X தளபக்கத்தில் திமுக IT விங் சரமாரியான கேள்விகளை ஆளும் அரசை நோக்கி கேட்கும் வண்ணம் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில், 'இதெல்லாம் பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில் கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என Punch Dialogue பேசியது எல்லாம் இதற்காகவா?. உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என வாய் கிழிய பேசும் முதலமைச்சர்

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தரும் இலட்சணம் இதுதானா?. சிங்கப்பெண் படை ரீல்ஸ் வீடியோ எடுக்க மட்டும்தான் உருவாக்கப்பட்டதா? என முதலமைச்சர் விஜய் விளக்கமளிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசாமல் செயலிலும் அதனை காட்ட வேண்டும்!" என்று காட்டமாக விமர்சித்துள்ளது.

தற்போது வரை சிறுமிகள் காணாமல் போன விவகாரத்தில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், காவல்துறை தொடர்ந்து தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், அடுத்தடுத்து சிறுமிகள் காணாமல் போனது, இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டது போன்ற சம்பவங்கள் சட்டஒழுங்கின் மீதான கேள்வியை எழுப்புவதாக மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.