முதல்வர் விஜய் குறித்து திமுக கவுன்சிலர் சொன்ன "வார்த்தை".. பாய்ந்தது வழக்கு! 10 நாட்களுக்கு பிறகு வைரலாகும் வீடியோ.. பின்னணி என்ன?

தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்
DMK councillor sudha
Published on: 
Updated on: 
2 min read

சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் இழிவாக பேசியதாக கூறப்படும் விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலேயும் தவெக நிர்வாகி உதயகுமார்  எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, அதே நிகழ்ச்சியில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும்போது நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 95ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன், முதலமைச்சர் விஜய் குறித்து இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்புகள் எழ தொடங்கியது. மேலும் தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகி உதயகுமார், சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்ளிட்டோர் மீது ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேடையில் பேசிய திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் பேச்சுக்கு, அதே மேடையில் இருந்த மேயர் பிரியா குலுங்கி குலுங்கி சிரிப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், அதே மேடையில் பேசிய கனிமொழி எம்.பி., எதிராளிகள் தரம் குறைந்து பேசினாலும் திமுகவினர் தங்களது நாகரிகத்தைக் கைவிடக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kanimozhi MP

இதுகுறித்து அவர் பேசுகையில், “நம் எதிராளிகள் யார், அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை வைத்து நாம் நம்மை உருவாக்கிக்கொள்ளக் கூடாது. அவர்கள் பேசட்டும்.. அவர்களின் தரம் அவ்வளவுதான். நாம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்தவர்கள் என்பதை நினைவில் வைத்து பேச வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் சுதா தீனதயாளனுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். “சுதாவுக்கு ஒரு அறிவுறுத்தல். வேகமாகவும் கோபமாகவும் பேசுகிறீர்கள். ஆனால், நாகரிகத்திலிருந்து விடுபடாமல் பேச வேண்டும். ஒருமையில் எல்லாம் பேசக்கூடாது” என்று அவர் தெரிவித்திருந்தார். கடந்த 7 ம் தேதி நடந்த நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சையில், திமுக கவுன்சிலர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அதே மேடையில் MP கனிமொழியும், முன்னிலை அமைச்சர் சேகர்பாபுவும் நாகரிகமான அரசியல் பேச்சை வலியுறுத்தியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com