தமிழ்நாடு

கூவத்தூர் 2.O வா? மாமல்லபுரம் ரிசார்ட்டில் என்ன நடக்கிறது? தவெக எம்.எல்.ஏ.க்கள் எங்கே?

MLA-களையும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டிகு வரவைத்து ஆலோசனைகூட்டம் நடத்துவது இதுவே முதல் முறை

Muthu Lakshmi

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 6 மாத காலம் ஆகிவிட்டது. இதற்கிடையில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஊழல் முறைகேடுகள் ஒரு புறம் இருக்க.. அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு, அலட்சிய போக்கு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றசாட்டுகள் என நாள்தோறும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு பாலியல் குற்றங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் சிக்கி வருவது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்நிலையில் சமீபத்தில் துணை சபாநாயகரும், துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் புகார் கொடுக்க வந்த ஒருவரை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்து பொய்யாக ஒரு வீடியோ எடுத்ததாகவும் மீண்டும் ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். புகார் கொடுக்க வந்த பொதுமக்களை தாக்குவதா? என்றும் துணை சபாநாயகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்த சர்ச்சை முடிவதற்குள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுப்பதாக, ஆட்சியரின் கணவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் அப்துல்லா ரஹ்மான் தலைமை செயலாளருக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். தமிழக வெற்றி கழக MLA மீது எழுந்துள்ள இந்த புகார் ஆளும் அரசுக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு விவகாரங்களும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்கு  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய், தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்- இன்று ஆலோசனை நடந்த முடிவு செய்துள்ளார். அதற்காக தவெக MLA-களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை வந்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், MLA-களை எச்சரிக்கவும் இந்தச் சந்திப்பு நடத்தப்படுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் துணை சபாநாயகர் குறித்து நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

இதற்கு முன் 2017 அதிமுகவில், OPS மற்றும் சசிகலா ஆதரவு என இரு அணிகள் உருவானது. முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் ராஜினாமா -விற்கு பிறகு பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சி சட்டசபையில் பெருன்பான்மையை நிருப்பிக்கும் வரை அதிமுகவின் 120-க்கு மேற்பட்ட எம்எல்ஏகள் கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். பெரும்பான்மையை நிரூபிக்க MLA-களை எதிர் அணி பேச்சு வார்த்தை நடக்கும் என்ற நிலையில் அவர்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர்.

அதற்கு பின் ஒரு கட்சியின் மொத்த MLA-களையும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டிகு வரவைத்து ஆலோசனைகூட்டம் நடத்துவது இதுவே முதல் முறை. இதில் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கை, தொகுதி நிலவரம், பொதுமக்களை அணுகும் முறை மற்றும் MLA-கள் மீதான குற்றசாட்டுகள் குறித்து பேசப்படும் என்றும் சொல்லப்டுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் விஜய் நேரடியாக MLA-களை சந்தித்து பேச உள்ளார், அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.