``எல்லோரும் கையெழுத்து போடணும்.." -தவெக MLA மீது அதிரடி நடவடிக்கை?.. கூட்டத்தில் CM விஜய்யின் முக்கிய அறிவுறுத்தல் என்ன?

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய MLAகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்ற MLAகளை எச்சரிக்கவுமே இந்த சந்திப்பு நடத்தப்படுவதாக சில தகவல்கள் கூறுகின்றன.
Action Against TVK MLA? What Was CM Vijay's Key Instruction in the Meeting?
``எல்லோரும் கையெழுத்து போடணும்.." -தவெக MLA மீது அதிரடி நடவடிக்கை?.. கூட்டத்தில் CM விஜய்யின் முக்கிய அறிவுறுத்தல் என்ன?
Published on: 
Updated on: 
1 min read

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மாமல்லபுரம் அருகே உள்ள 5 நட்சத்திர விடுதியில் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் நிகழ்ச்சி நிரல் என்ன, நோக்கம் என்ன என எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

நம்மிடம் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்களிடம்கூட எதற்கான கூட்டம், என்ன நிகழ்ச்சி நிரல் என வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்கின்றனர்.

முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க உள்ளார் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய MLAகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மற்ற MLAகளை எச்சரிக்கவுமே இந்தச் சந்திப்பு நடத்தப்படுவதாகச் சில தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக, தனிநபர் ஒருவரை அடித்த வீடியோ வெளியானதால் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறார் துணை சபாநாயகர் ரவிசங்கர்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கையொப்பம் பெறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் திட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை. கட்சியினருக்கே சஸ்பென்ஸாக இருக்கிறது. இன்று காலை முதல் சென்னையை வந்தடைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், எத்தனை மணிக்கு நட்சத்திர ஹோட்டலுக்கு வர வேண்டும் என்ற தகவல்கூட இல்லாமல் காத்திருக்கின்றனர்.

முதலமைச்சர் வழக்கம் போல தலைமை செயலகம் சென்றுள்ளதால் அவர் அலுவலக நேரம் முடித்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த அழைப்புக்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், வருகின்ற 13ஆம் தேதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சட்டமன்றத்தில் போதுமான ஆதரவு இருந்தாலும், தவெக உறுப்பினர்களை விலை பேச கடந்த சில வாரங்களாகக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. சட்டமன்ற உறுப்பினர் முஸ்தப்பா இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு MLAகளைத் தயார் செய்யவும், பிற கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர்க்கவும் நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Action Against TVK MLA? What Was CM Vijay's Key Instruction in the Meeting?
"அவர் என் கண்ணைப் பார்க்க மாட்டார்.." மோடி, RSS, இந்துமதம் குறித்து சோனியா காந்தி எழுதியது என்ன? | Belonging A Journey of Love
Action Against TVK MLA? What Was CM Vijay's Key Instruction in the Meeting?
"அப்பா இறந்துவிட்டார்" சோனியா காந்தியிடம் செய்தியை சொன்ன பிரியங்கா.. பிரதமர் ராஜீவ் கொல்லப்பட்ட இரவில் என்ன நடந்தது?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.