annamalai 
தமிழ்நாடு

டிடிவி -யை தூண்டிவிட்டதே அண்ணாமலை தான்…! “அவர ஒழுங்கா இருக்க சொல்லுங்க” - கூப்பிட்டு மிரட்டி அனுப்பிய தலைமை!?

அதிமுக -வும் பாஜக -வும் தங்களின் கூட்டணியை உறுதி செய்தன. ஆனால் கூட்டணி வைத்த நாளிலிருந்தே...

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 அதிமுக -வும் பாஜக -வும் தங்களின் கூட்டணியை உறுதி செய்தன. ஆனால் கூட்டணி வைத்த  நாளிலிருந்தே அதிமுக -பாஜக கூட்டணி அடிமட்ட அளவில் ஒன்றிணையவில்லை என்ற கூற்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சரிசெய்து இப்போதுதான் இரு கட்சிகளும் தங்களின் ஒற்றுமையை உறுதி செய்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில், NDA கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக கழன்றுகொண்டு வரும் போக்கும் நிகழ்கிறது.

ஆரம்பகட்டத்தில் பாஜக - அதிமுக கூட்டணி பொருந்தாமல் போனதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் முக்கியான ஒன்று அண்ணாமலை. அதற்கு காரணம் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, எடப்பாடி பழனிச்சாமியை “தற்குறி” என்றெல்லாம் விமர்சித்திருந்தார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றால் நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்” என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை ஏற்கனவே பேசியிருந்தார், இதன் விளைவாக இபிஸ் -க்கும் அண்ணாமலைக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து இருந்தது.

இம்முறை பாஜக தனித்து போட்டியிட்டால் அது திமுக -விற்கு வலு சேர்ப்பதாகிவிடும், எனவே மாநில தலைவர் பதவியை நாகேந்திரனுக்கு கொடுப்பதே சரியாக இருக்கும் என முடிவு செய்து அண்ணாமலையை கழட்டி விட்டுவிட்டு எடப்பாடி உடன் கூட்டணி அமைத்தது பாஜக. 

தமிழ் நாடு பாஜக வரலாற்றில் மாநில தலைவர்கள் பதவிலியிருந்து வெளியேறும்போது அவர்களுக்கு உயர்பதவிகள் கொடுப்பது வழக்கம். (ஆளுநர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகள்)அந்த வரிசையில் தற்போது அண்ணாமலையும் இணைந்துள்ளாரா? என்ற கேள்விதான் அனைவர் மனதிலும் நிறைந்து உள்ளது.

அண்ணாமலையின் பாஜக -விற்கு செய்த பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாராட்டி எக்ஸ் தளத்தில் ‘கட்சியின் தேசியக் கட்டமைப்பில் அண்ணாமலையை பாஜக முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் ” என பதிவிட்டிருந்தார்

இதையெல்லாம் நம்பி இருந்த அண்ணாமலைக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் அவர் பலநாட்களாவே பாஜக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனாலேயே பாஜக சம்பந்தமான கூட்டங்களை தவிர்த்து வந்தார். அதுமட்டுமின்றி அண்ணாமலை தனியாக கட்சி துவங்க உள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில்தான், நேற்று சென்னையில் நடைபெற்ற பாஜக மைய குழு கூட்டத்திற்கு வராமல் இருப்பதற்காக அண்ணாமலை தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி புறக்கணித்திருந்த நிலையில் இதையறிந்த தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி. எல். சந்தோஷ், பனையூரில் உள்ள அண்ணாமலையின் வீட்டுக்கே நேரடியாக சென்று அண்ணாமலையை அழைத்துவந்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “அண்ணாமலை அரசியலில் அறிமுகம் ஆகும்போதே ஒரு ஆட்டுக்குட்டியுடன் தான் அறிமுகமாகிறார். மேலும், அவர் நான் ஓர் ஏழை விவசாயி நாட்டுக்காக எதையும் செய்வேன் என்ற பிம்பத்தை கட்டமைக்கிறார். மேலும் அண்ணாமலை திமுக -வுக்காக தான் வேலை செய்கிறார். அதற்காகத்தான் அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க பார்க்கிறார். 1600 பாக்கு மரங்களுடன், தென்னை மரங்களுடன் இக்கரை கொடுவாம்பட்டியில் பெரும் சொத்து வைத்திருக்கிறார் என்ற செய்தி வெளியானத்திலிருந்துதான், அவர் வெளியில் வருவதை குறைத்துக்கொண்டுவிட்டார். மேலும் அண்ணாமலையை உருவாக்கி விட்டார். இன்றளவும் அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார், அதனால் தான் நேற்று மதியத்திற்கு மேல் அவர் கிளம்பி அந்த கூட்டத்திற்கு சென்றார். இந்த அமளிகளுக்கு எல்லாம் இடையீயதன் சொத்து குவிப்பு விவகாரம் வெளியில் வந்தது. இது வெளியில் வரவே, பாஜக தலைமை அண்ணாமலையை அழைத்து மிரட்டி அனுப்பியதாக சொல்லபடுகிறது, மேலும் அண்ணாமலையின் சொத்து விவரங்களை வெளியிட்டதே பாஜக -வினர் தான்.

தனி மனிதரை விட கட்சிதான் பெரிது அதைத்தான் பாஜக அண்ணாமலைக்கு வலியுறுத்தியிருக்கிறது, மேலும் அண்ணாமலை கட்சிக்கு எதிரான பல வேலைகளை செய்து வருகிறார், பாஜக - அதிமுக கூட்டணி உருவாவதையே தடுத்தார், அதிருப்தியில் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து, தலைமைக்கு எதிராக செயல்பட தூண்டினார், அதில் முக்கியமான ஒரு நபர் டிடிவி தினகரன். அவரை தூண்டிவிட்டு கூட்டணியை விட்டு வெளியேற வைத்ததே அண்ணாமலைதான். உண்மையில் சிக்கியது தினகரன் தான். இன்று அண்ணாமலை போய் கட்சியின் தலைமைக்கு அடிபணிந்துள்ளார். ஆனால் டிடிவி தினகரன் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.