தொடர்ந்து நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை நீடித்து வரும் நிலையில் கடந்த (ஜனவரி 9) ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதை தொடர்ந்து படத்தின் தணிக்கை வாரிய வழக்கின் தீர்ப்பு (ஜனவரி 9) ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜன 9 ஆம் தேதி இந்த வழக்கு தனி நீதிபதி ஆஷா தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகம் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்து தணிக்கை வாரிய குழு உடனடியாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் மேல்முறையீடு செய்து அதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்தனர்.
அப்போது இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரு தரப்பினருக்கு சில கேள்விகளை எழுப்பி இந்த வழக்கின் விசாரணையை (ஜன 21) ஆம் தேதிக்கு ஓதி வைத்தனர். இதனை எதிர்த்து படக்குழுவினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை நாடசொல்லியும். இந்த வழக்கை இன்று (ஜன 20) ஆம் தேதி விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் காலை முதல் படக்குழு மற்றும் தணிக்கை வரியா குழு சார்பாக அவரவர் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
தணிக்கை குழு
சட்டப்படியும், சினிமாட்டோகிராபி விதிப்படியும் 72 நிமிடங்களுக்கு மேல் படம் இருந்தால் அது குறித்து சென்சார் குழு தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இதற்கு போதுமான கால அவகாசத்தை தனி நீதிபதி எங்களுக்கு கொடுக்கவில்லை. மண்டல அலுவலகத்தில் உள்ள குழுவின் முடிவுகள் தணிக்கை வாரியத்தை கட்டுப்படுத்தாது.
ஜனநாயகன் படத்தை குறித்து புகார் வந்த நிலையில் படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. 14 இடங்களில் காட்சிகளை நீக்க வேண்டும் என தெரிவித்த நிலையில் படக்குழு அதை நீக்கி விட்டதாக தெரிவித்தது. கடந்த 6 ஆம் தேதி வழக்கு தொடரும் போது இந்த படம் மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பது படக்குழுவிற்கு தெரியும்.
படக்குழு தரப்பு
படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தணிக்கை வரியா குழு மூலமாக தெரிவிக்கப்படவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை வரியா தலைவரின் உத்தராவது இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை.
சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதியை தணிக்கை வாரிய குழு மீறியுள்ளது. தொடர்ந்து ஜனநாயகன் படத்தில் (டிச 29) ஆம் தேதிக்கு பிறகு தணிக்கை வாரிய குழுவின் அனைத்து செயல்பாடுகளும் மறைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே நீக்கப்பட்ட 14 காட்சிகளை மீண்டும் இணைத்து படத்தை மறு ஆய்வுக்கு சமர்ப்பிப்பது கடினம் என வாதிடப்பட்டது.
தலைமை நீதிபதிகள்
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதிகள் தணிக்கை வாரியத்திடம் ‘படத்திற்கு எதிரான புகார் யாரிடமிருந்து பெறப்பட்டது? சென்சார் போர்டில் யார் படத்தை பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து சான்றிதழ் அளிக்க யாருக்கு உரிமை உண்டு? என சில கேள்விகளை எழுப்பினர்.
அதனை தொடர்ந்து பட குழுவிடமும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஒரே நாளில் அனைத்து நடைமுறைகளையும் முடித்து உத்தரவு வழங்க வேண்டும் என்பது ஏற்க முடியாது என்றும் போதுமான கால அவகாசத்தை தணிக்கை வாரியத்திற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.