நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை குறித்து தென் மாநிலங்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி வரையறை மேற்கொள்ள வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொண்ட அவர் கூறுகையில்...
மத்திய அரசு நினைப்பது போல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து மறு வரையறை செய்யப்பட்டாலோ, தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மறு வரையறை செய்யப்பட்டாலோ அது தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா கேரளா உள்ளீட்டு தென்மாநிலங்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் என்ற அச்சம் உள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதற்காக தமிழக முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அரசியல் வேறுபாடு இன்றி அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொகுதி மறு வரையறை குறித்த கருத்து தமிழக மக்களின் ஒருமித்த குரலாக எதிரொலிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போது நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களின் பிரதிநிதித்துவம் 7.18 ஆக உள்ளது தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் இது ஐந்து புள்ளி 7 சதவீதமாக குறையக்கூடிய வாய்ப்புள்ளது அதனால் தென் மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்
எனவே முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கௌரவம் பார்க்காமல் பிற கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.